Sunday, November 4, 2012

Howwwwwzzzzzzzzzzaaaaatttttttttt.....!!!!

முன்குறிப்பு:
ஒலி வடிவ லின்க்கில் பிரச்சினையுள்ளதால் இன்னொரு வழியை கையாண்டுள்ளேன். இன்ஷா அல்லாஹ் இதில் ஏதும் பிரச்சினை வராதென்றே நினைக்கின்றேன். கீழே வரும் இடங்களில்  சிவப்பு வண்ணத்தில் உள்ள வாக்கியங்களை சுட்டினால் வேறொரு விண்டோவில் ஒலி வடிவ உச்சரிப்பை கேட்கலாம். 
=========================================================================
இந்தப் பதிவின் தலைப்பை கிரிக்கெட் ஆரவம் உள்ள எவரும் மறக்க இயலாது. கரெக்ட்டா???? அதில் வரும் ‘How' தான் இன்றைய கேள்வியின் நாயகன்.... ஐ மீன்.... பதிவின் நாயகன்.... :))

How என்பது நம் தினசரி வாழ்க்கையின் தவிர்க்க இயலாத ஒரு வார்த்தை. காலை முதல் இரவு வரை எத்தனை தடவை (How many times :) ) நாம் இதனை உப்யோகிக்கிறோம் என்பதை கணக்கிடவே முடியாது. ஆனால் அத்தகைய வார்த்தையை சரியான வழியில் உபயோகிப்பதும் சிக்கலான பாடமே... மற்ற கேள்விகளும் (what / when / where / which / who / whom / whose / when / why) சிக்கலானவையே என்றாலும் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிக்கோளைப் பொறுத்து மாறும்.

WHAT  -- ஏதேனும் ஒரு பொருளை / உயிரை / இடத்தை  குறிக்கும்போது                                                                                  
WHEN -- எப்பொழுது ( காலத்தை குறிக்கும்போது)             
WHY -- ஏன் (காரணத்தை குறிப்பது)                                           
WHERE -- எங்கே (மெய் அல்லது மெய்நிகர் இடத்தை)     
WHOM -- யாரை                                                                                  
WHOSE -- யாருடைய                                                                       
WHICH -- எந்த                                                                                      
WHO -- யார்                                                                                           

மேலே பார்த்தீர்களானால் அந்தந்த வார்த்தைகளே எதைப் பற்றி குறிப்பிடுகிறோமே அதைப் பொறுத்து நாம் உபயோகிக்கிறோம்.... ஆனால் HOW அப்படியல்ல. அதன் பின் வரும் வினைச்சொல்லைப் பொறுத்து ( வினைச்சொல் -- செய்யும் / செய்த/ செய்யப்போகின்ற வேலையைக் குறிக்கும்) மாறும். உதாரணமாக...

எத்தனை வாழைப்பழம் நீ வாங்கினே.... (மறக்க முடியாத ஒரு டயலாக் :)) )
எத்தனை / எவ்வளவு உனக்கு வேண்டும் (பணம் / பண்டம் என எதுவும்... கொள்ளளவு)
எவ்வளவு தூரம் நாம் இன்னும் போக வேண்டும்..

இப்பொழுது பார்த்தீர்களானால் மேற்கண்ட வாக்கியங்கள் அனைத்தும் HOW வில்தான் ஆரம்பிக்கின்றன.... என்றாலும் அதனைத் தொடர்ந்து வரும் சொற்களைப் பொறுத்து அதன் பொருளே மாறுபடுகிறது. எத்தனை வாழைப்பழம் என்னும் இடத்தில் எவ்வளவு வாழைப்பழம் என்னும் பதத்தை உபயோகிக்க இயலாது....  தமிழில், அதுவும் பேச்சுத்தமிழில் பிரச்சினை தெரியாது.... ஆனால் ஆங்கிலத்தில் முக்கியம். எளிய விதத்தில் நாம் இதனை உபயோகிக்க பழகுவோம், இன்ஷா அல்லாஹ்.

1. COUNTABLE NOUNS 
எண்ணக்கூடிய அளவுகள் வரும்போது எப்பொழுதுமே HOW விற்கு பிறகு MANY என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். கோளங்கள்,  நட்சத்திரங்கள் உட்பட இந்த வகையில்தான் சேரும்.

உதாரணங்கள்:

2. UNCOUNTABLE NOUNS  
அதுவே எண்ணவியலா / அளக்க இயலா கொள்ளளவு என்றால் HOWவிற்கு பிறகு MUCH என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். இங்கே பணம், பெட்ரோல் எல்லாமே அளக்கக்கூடியதுதானே என்றால்.... இப்படி நினைத்துக் கொள்ளுங்கள்... 1,2,3 என்று எண்ணவியலாதவை / வரிசைப்படுத்த இயலாதவை இந்த வகையில் சேரும்
சில டிப்ஸ்களை நினைவில் வைத்துக் கொண்டால் இது இன்னமும் எளிதாகும்.
1.எண்ணக்கூடிய அளவில் உள்ள பொருட்களை / பன்மையை HOW MANY என்று குறிப்பிட வேண்டும்.
2. எண்ணவியலா / ஒருமையில் குறிப்பிடக்கூடிய பொருட்களை HOW MUCH என்று குறிப்பிட வேண்டும்.
3. ஒரு பொருளை மட்டுமே குறிப்பிடுகிறோம்... ஒரு பொருளைப் பற்றி பேசுகிறோம் எனும்போது HOW MUCH என்று குறிப்பிடுவோம்.

இரண்டும் சேர்த்தும் ஒரு உதாரணத்தை கவனியுங்கள். HOW MUCH COFFEE(எண்ணிக்கையிலடங்காதது) DO YOU DRINK AND HOW MANY SPOONS(எண்ணக்கூடியது) OF SUGAR YOU TAKE?

சுயபரிசோதனை:
1.கீழே உள்ள வாக்கியங்களில் என்ன பதம் ( MANY / MUCH ) வரும் என்பதை பூர்த்தி செய்யுங்கள்.
1. HOW _____________ APPLES DO YOU WANT?
2. HOW _____________ APPLE JUICE IS LEFT?
3. HOW _____________ MILK IS LEFT?
4. HOW _____________ LITRES OF MILK DOES SHE NEED?
5. HOW _____________ LIFE IS LEFT TO LIVE?
6. HOW _____________ YEARS OF LIFE DO WE HAVE?
7. HOW _____________ INFORMATION IS AVAILABLE?
8. HOW _____________ INFORMATION BROCHURES ARE AVAILABLE?
9. HOW _____________ IS LEFT TO READ?
10. HOW _____________ PAGES DID YOU READ?

மேற்கண்ட கேள்விகளை சரியாக விடையளித்தால் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆங்கில இலக்கணத்தில்  நான்கு பாடங்களை நீங்கள் புரிந்து கொண்டதாக அர்த்தம். :))

2.அதே போல், இந்தப் பாடத்தில் உபயோகித்துள்ள வாக்கியங்களை தமிழ்ப்படுத்துங்கள். இங்கே கமெண்ட்டிடுங்கள். 

இன்ஷா அல்லாஹ், கூடிய சீக்கிரமே அடுத்த பாடத்தை படிப்போம்.... அதுவரை, Take care :)

14 comments:

 1. ஓட்டு வரும் முன்னே.. கமெண்ட் வரும் பின்னே...

  ReplyDelete
  Replies
  1. comment traffic jam la irukko??? innum varalai ??? :))

   Delete
 2. HOW MANY MEN WERE THERE KALIA? kalia என்றால் என்ன?
  2. HOW MANY MARKS DID YOU MISS? எத்தனை மதிப்பொண்களை நீ இழந்தாய்?
  3. HOW MANY TIMES HAVE YOU READ THIS? எத்தனை முறை நீ இதனை வாசித்தாய்?
  4. HOW MANY LIVES DID WE LOSE? எத்தனை முறை வாழ்க்கையில் தோற்றாய்?
  5. HOW MANY MANGOES ARE THERE IN THE BAG? எத்தனை மாம்பழங்கள் இந்த கூடையில் இருக்கிறது>

  ReplyDelete
  Replies
  1. sister..... athu oru famous hindi film dialog.... Kalia -- oru name. :)))

   1. Right
   2. Right -- தொலைத்தாய்...correct
   3. வாசித்துள்ளாய்
   4. இல்லை.... தவறு.... இன்னொரு முறை முயற்சித்துப் பாருங்க.... சரி வரலை என்றால் இன்ஷா அல்லாஹ் சொல்கிறேன். :)
   5. கரெக்ட் :)

   :))

   Delete
 3. 1. HOW MUCH DOES IT COST? எவ்வளவு பணம்?
  2. HOW MUCH DO YOU NEED? எவ்வளவு தேவைப்படும்?
  3. HOW MUCH IS LEFT? எவ்வளவு போயிருக்கிறது?
  4. HOW MUCH DID HE PAY? எவ்வளவு பணம் அவன் கொடுத்தான்?
  5. HOW MUCH PETROL DOES SHE NEED? அவளுக்கு எவ்வளவு பெட்ரோல் தேவைப்படும்?

  ReplyDelete
  Replies
  1. 1. ✓
   2. ✓
   3. ✓ (எவ்வளவு மீதமிருக்கிறது)
   4. ✓
   5. ✓

   :))

   Delete
 4. . HOW ___many__________ APPLES DO YOU WANT?
  2. HOW ___much__________ APPLE JUICE IS LEFT?
  3. HOW ____much_________ MILK IS LEFT?
  4. HOW ____many_________ LITRES OF MILK DOES SHE NEED?
  5. HOW ___much__________ LIFE IS LEFT TO LIVE?
  6. HOW ___many__________ YEARS OF LIFE DO WE HAVE?
  7. HOW ___much__________ INFORMATION IS AVAILABLE?
  8. HOW _____many________ INFORMATION BROCHURES ARE AVAILABLE?
  9. HOW _____much________ IS LEFT TO READ?
  10. HOW ______many_______ PAGES DID YOU READ?

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே கரெக்ட் :)))

   Delete
  2. வெல்டன் மாஷா அல்லாஹ் :))

   Delete
  3. Appada... Or alavu therivethen endru neenaikuren...

   Delete
 5. What happed aanu...? Why long gap? Are u okay?

  ReplyDelete

Please leave a decent / encouraging / criticizing word.... not discouraging / offensive or of illicit nature. Thanks !