Friday, September 28, 2012

அறிமுகம் :)


பிஸ்மில்லாஹ் -- இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

சுய அறிமுகம்:
சகோஸ், பொதுவாகவே இந்த இடத்தில்தான் நாம அதிகமா சொதப்புவோம்... என்ன வேலைன்னு கேட்டால் கூட நம்மளுடைய போஸ்ட் அல்லது பொசிஷன் என்னன்னு சொல்லிடலாம்.... ஆனால் சில பேர் அதுல என்ன வேலை செய்வீங்க.... அப்படி இப்படின்னு கேட்க ஆரம்பிச்சா.... அப்புறம் நமக்கு நாக்கு மரத்துப் போயிடும்.... சரி விடுங்க.... அவங்களை எப்படி சமாளிக்கலாம்னு முதல்லேர்ந்து பார்க்கலாம்.
தமிழ் மொழியில இருக்குற மாதிரியே ஆங்கிலத்திலும் பேச்சு வழக்கில் ஒன்றும், எழுதும்போது ஒன்றுமாக உபயோகிப்பார்கள். பொதுவாக பேசுவதை Informal என்றும், எழுதுவதை Formal என்றும் அழைப்பார்கள். பேச்சிலும் அலுவலக ரீதியாக பேசுவது வேறு (Formal – ஃபார்மல்), நட்புக்களுடன், பொது ஜனத்துடன் பேசுவது வேறு (Informal – இன்ஃபார்மல்). இங்கே இரண்டு சந்தர்ப்பங்களிலும் உங்களைப் பற்றிய அறிமுகத்தை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். Let’s go….

பொதுவாக எல்லாரிடமுமே கீழிருப்பது போல் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
Hi, My name is Anisha
உங்க பேரு மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர்ராஜன்ஆக இருந்தாலும், முன்னாடி நிக்கிறவர் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கனும்ன்னா
Hi, my name is Sundar
அப்படின்னு சொன்னாலே போதும். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களை / சூழ்நிலைகளை Casual / Informal அப்படின்னு சொல்வோம் ஆங்கிலத்தில். சரியா??
அதுவே ஒரு இண்டர்வியூக்கு போறீங்க... அல்லது பிஸினஸ் விஷயமா ஒரு பெரும்புள்ளியை அலுவலக ரீதியா சந்திக்கிறீங்க.... இந்த மாதிரி சூழ்நிலைகளை Formal அப்படின்னு சொல்வோம். இதுல நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது முழுப்பேரையும் சொன்னால்தான் நலம்.
[இராஜாதி ராஜ மார்த்தாண்ட குலோத்துங்க பராக்கிரம சுப்பையன்ன்னு பேர் இருந்தால் அதை பயோடேட்டாவோட நிறுத்திக்குங்க ப்ளீஸ்....வேணாம்...:(( ]

உதாரணத்துக்கு :
Hi My name is, Omar Abdullah.

(
அல்லது கூப்பிடுவதையும் முழு பேரையும் ஒரே நேரத்தில் சொல்ல ஆசைப்பட்டால் )
Hi, My name is Karthick. Karthick Natarajan.
(இதை இன்னும் சில விதங்களிலும் சொல்லலாம்.... உங்களுக்கு எந்த ஸ்டைல் பிடிச்சிருக்கோ...அந்த ஸ்டைல்ல :))
Hi, I am Bombay Batsha. Call me Rajini.
(smile  கண்டிப்பா உதிர்ந்து விடாமலே வைங்க)

சில சமயம் ஃபோனில் அல்லது ஈ-மெயிலில் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள தேவைப் படும்போது இப்படியும் பேசலாம் / எழுதலாம்:
Hello, This is Ibrahim.
(அல்லது தெரிந்த நபருடன் பேசுகிறோம், அவருக்கு நம்மை அடையாளம் காண இயலவில்லை எனில்)
Hey It's me...Anisha. Remember??
(அல்லது)
Hey It's me...Shruti... I am your …
(team mate / class mate / assistant / manager....இப்படி எந்த உறவுமுறை உங்களுக்குள் இருக்கிறதோ அதை உபயோகியுங்கள்.)

(
அல்லது முதன் முதலில் யாரையேனும் சந்திக்கிறீர்கள். முதல் தடவையாக ஒரு டீமில் இணைகிறீர்கள்..அல்லது ஒரு வகுப்புக்கோ / குழுவிற்கோ சுய அறிமுகம் தர வேண்டி உள்ளது....அல்லது திடீரென ஒரு ஸ்டேஜில் உங்களிடம் மைக் கொடுத்து விடுகிறார்கள்....இந்த மாதிரி சமயங்களில்)
Hi. Let me introduce myself... I am Michael.
(அல்லது)
Hello all. Allow me to introduce myself. I am Amina from Wonderland.
(smile please... :)
(அல்லது)
I just wanted to introduce myself.... I am Jaleela, your new Catering Teacher.

(
அல்லது உங்கள் குழந்தைகளின் நட்புக்களின் பெற்றோரை சந்திக்கும் தருணம்.... இது மாதிரி உதாரண சம்பவங்களில்)
I don't think we have met before.... I am Kannan.And you?
(இது casual நினைவில் வையுங்கள்...)
(அல்லது)
I don't think we've actually met formally yet,... I am Shah. May I know about you??
(தமிழில் சொன்னால்.... இது வரை நாம சந்திச்சதில்லைன்னு நினைக்கிறேன்.... நான் ஷாஹ். உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா??--- இது formal/business சந்தர்ப்பம்.... நினைவில் வைங்க)
இதில் இருப்பது போலவே பேச வேண்டும் என்றில்லை. மெதுவாக், தெளிவாக அதே நேரம் அழுத்தமாக நீங்கள் உங்களின் பெயரை “நான்” / I am என்று உங்களுக்கு தோதான விதத்தில் சொன்னாலே போதுமானது.

சரி, இந்தப்பாடத்தில் ஒரு சின்ன தேர்வு. முயற்சித்துப் பாருங்கள்
1.       ஜோசப் ரயில்ல பயணம் செய்யறார். கொஞ்சம் தொலைதூர பயணம் என்பதால் அருகில் இருப்பவரிடம் பேச நினைக்கிறார். அவரை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வார்???
2.       நிஷா வெளிநாட்டுக்கு புதிது. அப்பார்ட்மெண்ட்டுல வசிக்க வர்றாங்க. கணவன் வேலைக்கு போனதும் பக்கத்து அப்பார்ட்மெண்ட்டுல இருக்கும் பெண்ணிடம் நட்பை துவங்கலாம்னு நினைச்சு போறாங்க. கதவை திறக்கும் அந்த பெண்ணிடம் எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வாங்க??
3.       வருண், தன்னுடைய மனைவியோடு அவங்களின் குழந்தை கிஷன் படிக்கும் ஸ்கூலுக்கு போறாங்க. அங்கே தலைமையாசிரியரிடம் எப்படி அவங்களை அறிமுகப்படுத்திக்குவாங்க???

இதற்கான பதில்களோடு அடுத்த திங்கள் இன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால் சந்திக்கலாம். அதுவரை, Have a Happy weekend :))

83 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அன்பு சகோ.,

    மாஷா அல்லாஹ் தெளிவான புரிதலுடன் எளிய நடையில் ஆங்கில பயிற்சி!

    என்னைப்போன்றவர்களுக்கு இந்த தளம் நூறு சதவீகிதம் பயன்படும் என்பது நிச்சயம்!

    தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கல்வி ஞானத்தை அதிகமாக்க இறைவன் போதுமானவன்!

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் குலாம்.
      அல்ஹம்துலில்லாஹ்... பயன்படும், பயன்படவேண்டும் என்றுதான் இதை ஆரம்பித்ததே... இன்ஷா அல்லாஹ், து’ஆ செய்யுங்கள். முதல் பின்னூட்டத்திர்கும், ஊக்கத்திற்கும் நன்றி. :))

      வஸ் ஸலாம்.
      :)

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    மிக இலகுவாக அடிப்படையை சொல்லி தந்திருக்கிறீர்கள் ,
    மிக நன்று மிக்க மகிழ்ச்சி
    தொடருங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. @சாதிக் பாய்,
      அல்ஹம்துலில்லாஹ், தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்... :)

      Delete
  3. Assalamu Alaikkum sister!

    I am Abdul Basith, Author of blogger nanban blog. Remember???

    :)))

    Really superb... It will help me too.... In Sha Allah....

    ReplyDelete
    Replies
    1. @பாஸித்....,

      Good go... இப்படியே கடைப்பிடித்தால் சீக்கிரம் முன்னேறலாம் இன்ஷா அல்லாஹ். மிக்க சந்தோஷம்.
      வஸ் ஸலாம் :)

      Delete
  4. மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி...
    இப்படியான தளங்கள். 100% அவசியம் சகோ.
    நானும் இதை பிரயோசமானதாக ஆக்கிககொள்ள வேண்டும் என்று நினைக்கிநேன்.அல்லாஹ் துணை புரியட்டும்...
    எனகவாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. @நிஹாஸா சகோ.

      இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக பயன்படுத்துங்கள். உங்களின் து’ஆவிற்கு மிக்க நன்றி. :))

      Delete
  5. Replies
    1. @shaik Dawood bhai,
      wa alaikum as salam,

      Jazakallahu Khayr for your wishes. :))

      Delete
  6. salam sister......!
    masha allah good info....!
    i'm waiting for next post keep it up.......!

    ReplyDelete
    Replies
    1. Wa alaikum salam brother,

      Please follow up and do du'as for its success. Jazakallaahu Khayr.

      wa Salam. :))

      Delete
  7. நடுநடுவில எதோ இங்கிலிபீஸ்ல ஏதோ எழுதி இருக்கீங்களே அது என்ன டீச்சர் :-)))

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா....
      அது என்னன்னு புரிஞ்சுக்க அடுத்த க்ளாஸுக்கும் மறக்காம வந்துடுங்க :))

      Delete
  8. salam sister......!
    masha allah good info....!

    ReplyDelete
    Replies
    1. wa alaikum as salam,

      jazakallaah for being here :)
      wa salam. :)

      Delete
  9. Nice post... iit will be helpfull... great job...thx dear

    ReplyDelete
  10. Nice post.. it will be helpfull.. good job... thx dear

    ReplyDelete
  11. assalaamu alaikkum

    mashaallah.nice job annu,
    it will be help full our sisters & brother.

    ReplyDelete
    Replies
    1. wa alaikum as salam sister.Fasmin,
      Despite your busy schedules and exams, you came to wish me... I am so delighted. Jazakallaahu Khayr for your wishes :)

      Delete
    2. ஆஹா...ரெண்டு டீச்சரும் ஒன்னு சேர்ந்துட்டாங்களா..?? அடுத்த கிளாசுக்கு மட்டம் போடுட வேண்டியதுதான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-))

      Delete
    3. அதெப்படி மட்டம் போடுவீங்க.
      குச்சி எடுத்து தேடி வரும்ல

      Delete
  12. நல்ல முயற்சி! பலருக்கும் பயனளிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ,
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பாய்,
      :))

      Delete
  13. மிக சிறப்பான தொடர்பதிவாக நிச்சயம் ஆங்கிலம் பேசலாம் அமையும்,,,

    வாழ்த்துகள் சகோ,,,,

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ :))

      Delete
  14. மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி...

    ReplyDelete
    Replies
    1. அஸ் ஸலாமு அலைக்கும் சகோ....

      வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ :))

      Delete
  15. மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி...

    ReplyDelete
    Replies
    1. அஸ் ஸலாமு அலைக்கும் சகோ....

      வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ :))

      Delete
  16. 1. Hi, My name is Joseph, And you?

    2. Hi, I am nisha. i am new to here and i stayi ng on next apartment.

    3. Hello sir! i am varun and this is my wife. we are parents of your student, kishan.

    :) :) :)

    ReplyDelete
    Replies
    1. 1. Correct :))
      2. Concept correct, but grammatically wrong. கண்டுபிடிங்க என்ன தப்புன்னு :)) (நீங்களே கண்டுபிடிச்சிட்டால் அந்த பாடம் மறக்காது :) )
      3. Correct :))

      Delete
  17. assalamu alaikum
    brother siraj has started a similar initiative in the facebook group. Good to see many initiatives of such kind. May allah make it successful...

    ReplyDelete
    Replies
    1. wa alaikum as salam brother.

      I dint know about that. But from some of the comments, I understood that you are also a part of that initiative. You can contribute here too, if you feel good about this. Please let me know :))

      Aameen for your dua :))

      Delete
  18. Masha Allah,

    This blog is really good, it will be helpfull to all.

    i want to try the above questions, answers. where will i post the answers? Shall i post my answer here?

    ReplyDelete
    Replies
    1. Brother,

      உங்கள் பதில்களை இங்கேயே பதிவு செய்தால் தயங்குகின்ற பலருக்கும் உபயோகமாயிருக்கும் :)

      இங்கேயே பதிவு செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் :))

      Delete
  19. Peace be up on you.

    Sis.Annu,
    I pray Almighty, to become a very good blog to teach and learn english through tamil.

    And a very nice first post on introduction as well as teaching thorough it..!

    Congratulations...! keep it up..!

    ReplyDelete
    Replies
    1. May peace be upon you too Bro.Ashik,

      Where is the 'subject' in your 'prayer' sentence ????

      Jazakallaahu Khayr for your wishes Bro.

      wa Salam,
      :))

      Delete
  20. ஜோசப் ரயில்ல பயணம் செய்யறார். கொஞ்சம் தொலைதூர பயணம் என்பதால் அருகில் இருப்பவரிடம் பேச நினைக்கிறார். அவரை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வார்???
    Joseph: hai im joseph.. and u..
    john :i m john..
    joseph: r u going to chennai..?
    john : yes im going to chennai..
    josh: ohh.. good i am also going to chennai it's very long journey.. i feel very boring.. if you have any reading book give me..
    john: yes i have some crime novel book, you like crime books?
    josh: yes i like it.. thankyou

    ReplyDelete
    Replies
    1. ஃபாயிஜாக்கா.... சூப்பர்ப்.... மாஷா அல்லாஹ்.... அருமையான முயற்சி அக்கா.... இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே இங்கே அட்மின் ஆயிடுவீங்கன்னு நினைக்கிறேன் :))

      நல்லா புரிய ஆரம்பிச்சிருக்கீங்க.... சில இலக்கணப்பிழைகளை மட்டும்சரி செய்துட்டால் வெரி வெரி குட் :))

      //josh: ohh.. good i am also going to chennai it's very long journey.. i feel very boring.. if you have any reading book give me..
      john: yes i have some crime novel book, you like crime books?//
      இந்த லைன்களில் தகராறு. இன்ஷா அல்லாஹ்.... நாளை காலை என்ன பிரச்சினை என்று எழுதுகிறேன். :)

      Delete
    2. thanks for your encouragement. i can't reach your position. but i try to reply your post..dear. நீங்களே என்ன பிரச்சனை என்று சொல்லுங்க. எனக்கு தெரியவில்லை

      Delete
    3. //it's ** a ** very long journey// (கனெக்டிங் வேர்டு தவறிவிட்டது.
      //i feel ** it ** very boring // (இங்கே it எனும் சொல், அந்த பயணத்தை குறிக்கும்.
      அல்லது
      //i feel very bored// -- ஏற்கனவே அந்தப் பயணம் சோம்பலை தருகிறது என்பதை குறிக்கும்.
      //any reading book -- any book to read// -- இங்கே reading book என்று உபயோகப்படும்போது, ‘தன்னைத்தானே படிக்கும் புத்தகம்’ என்னும் பொருளில் வந்துவிடும்.... reading glasses எனும் சொல்லைப் பாருங்கள், படிக்க உதவிடும், அல்லது அதன் மூலம் படிக்க உதவும் கண்ணாடி என்று பொருள் வரும் அல்லவா... அது போல்தான் இதுவும் :))
      கடைசி வரியில்
      //***Do ** you like crime books// என்று வரும். verb....விடுபட்டு விட்டது....

      இதெல்லாம் போக போக கண்டிப்பாக சரியாகி விடும் அக்கா.... கவலை வேண்டாம்.... இதே ரீதியில் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து கொண்டே இருங்கள். :))

      Delete
  21. நிஷா வெளிநாட்டுக்கு புதிது. அப்பார்ட்மெண்ட்டுல வசிக்க வர்றாங்க. கணவன் வேலைக்கு போனதும் பக்கத்து அப்பார்ட்மெண்ட்டுல இருக்கும் பெண்ணிடம் நட்பை துவங்கலாம்னு நினைச்சு போறாங்க. கதவை திறக்கும் அந்த பெண்ணிடம் எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வாங்க??
    nisha: hai.. i m nisa.. i'm new for this apartment. i staying in 3rd floor
    pooja: r u from india.. glad to meet u.. please come inside.
    nisha: thankyou
    pooja:which part you to come from india?
    nisha: tamilnadu.. and u
    pooja: i m form goa..
    nisha: oh.. nice place.. how long you stay here?
    pooja:since 4 years i stay here. then when you come to london?
    nisha: last week
    pooja: oh good..

    ReplyDelete
    Replies
    1. இதுவும் சூப்பர் அக்கா :))

      பிரச்சினை இருக்கிற இடங்கள் மட்டும் குறிப்பிடறேன்... நீங்களே கண்டுபிடிச்சுட்டா பாடம் மனசை விட்டு விலகாது. இல்லை என்றால் இன்ஷா அல்லாஹ் நான் சுட்டிக் காட்டுகிறேன்.

      //i staying in 3rd floor//
      //which part you to come from india?//
      //i m form goa..//
      // how long you stay here?//
      /since 4 years i stay here. then when you come to london?//

      Delete
    2. line by line mistake... ohh dear..

      Delete
    3. ஹ ஹ ஹா... கவலைப்படுவது கூட ஆங்கிலத்திலா.... ஹ்ம்ம்... :))))

      ஓக்கே...இதில் கனெக்டிங் வார்த்தைகள் அதிகம் விடுபட்டுள்ளன....
      // i **am** staying in third floor//
      //which part of india are you from//
      or
      //which part of india do you come from//
      //i am from Goa// -- small spelling mistake only :))
      //**for** how long have you been here//
      //I am staying here for the past four years. Then... when did you come to London?//

      Delete
  22. வருண், தன்னுடைய மனைவியோடு அவங்களின் குழந்தை கிஷன் படிக்கும் ஸ்கூலுக்கு போறாங்க. அங்கே தலைமையாசிரியரிடம் எப்படி அவங்களை அறிமுகப்படுத்திக்குவாங்க???
    varun: good morning i m varun this is my wife tara..we are parents of ur student, kishan.
    teacher: ohh good
    varun: how is he's doing?
    teacher: he is a brilliant boy.
    varun: thankyou

    ReplyDelete
    Replies
    1. சான்ஸே இல்லை.... இதுல மிஸ்டேக்கே காணோம்... :)))) மிக மிக மகிழ்ச்சி அக்கா....

      எதுவுமே மிஸ்டேக் இல்லை என்றாலும், எப்பொழுதும் நம் பொருளை, நமக்கான உரிமையில் குறிப்பிடுவதே சிறந்தது. அதாவது.... உங்க ஸ்டூடண்ட் கிஷன் என்பதை விடவும், எங்கள் மகன் கிஷன் என குறிப்பிடுவது சிறந்தது.

      கலக்கிட்டீங்க :)))

      Delete
    2. ஆங்கிலத்தில் கலக்கி கொண்டுயிருக்கும் மக்களே என் பதிலை பார்த்து சிரிக்காதிங்க.. நான் இப்ப தான் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறேன் அன்னுவிடம்.

      Delete
    3. subhaanallah....neenga unmaiyilaeyae sema fast akkaa.... insha allah.... koodiya seekiram english-layae kooda pathivu elithuduveenga :))

      Delete
  23. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ்..அனைவரும் பயன் பெற கூடிய ஒன்று..

    எங்களை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமா இருக்கும்..உங்களின் ஆக்கபூர்வமான இந்த பணி வெற்றிகரமா ஆக்க என்னுடைய துஆ சகோ..:))

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் சகோ ஆயிஷா.

      அல்ஹம்துலில்லாஹ் சகோ.
      உங்களின் து’ஆவை அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன். :)

      Delete
  24. salam
    Allah will give u more effort to do this work
    continiue ...very interesting & helpful also
    expecting yr next post

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் சகோ.

      அல்ஹம்துலில்லாஹ் சகோ.
      உங்களின் து’ஆவை அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன். :)

      Delete
  25. நல்ல முயற்சி, பாராட்டுகள் இப்படி ஒரு ஆசிரியரின் கடமையை கையிலெடுத்ததுக்கு, என் முகப்புத்தகத்திலும் பகிர்ந்திருக்கேன், மேலும் பலர் பயனடைவார்கள்..

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் சகோ.

      அல்ஹம்துலில்லாஹ் சகோ.
      உங்களின் பாராட்டுக்கு நன்றி :)

      Delete
  26. ஸலாம் சகோ.
    மிகவும் பயனுள்ள முயற்சிக்கு வாழ்த்துகள். குறிப்பா எனக்கு ரொம்ப இந்த தளம் பயன்படும்னு நினைக்கிறேன். ஏன்னா படிக்கிற காலத்திலேருந்தே நமக்கு இங்குலீசுன்னா கொஞ்சம் அல்ர்ஜி..!!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் சகோ.

      அல்ஹம்துலில்லாஹ் சகோ.
      கண்டிப்பாக பயன்படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ்.

      Delete
  27. சகோ அன்னு...

    வாவ்....நல்ல முயற்ச்சி.. இறைவன் உங்களுக்கு நற்க்கூலி வழங்குவானாக.... டீக்கடையிலும் இன்ஷா அல்லாஹ் க்ளாஸ் நடக்க இருக்கிறது..அந்த குழுவிலும் நீங்கள் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அல்ஹம்துலில்லாஹ் சகோ.
      உங்களின் து’ஆவை அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன். :)

      இன்ஷா அல்லாஹ் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் :)

      Delete
  28. it is really good blog for those wants to learn english in simple way.thanks for sharing ur contribution sister

    ReplyDelete
  29. மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி...
    இப்படியான தளங்கள். 100% அவசியம்

    ReplyDelete
    Replies
    1. அல்ஹம்துலில்லாஹ் சகோ. :)

      Delete
  30. மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி...
    இப்படியான தளங்கள். 100% அவசியம்

    ReplyDelete
  31. ஸலாம்..

    எப்படியாவது ஆங்கிலம் கத்துக்கணும்னு காசு கொடுத்து ரெபிடெக்ஸ் வாங்கி திறந்து பார்த்தா அதுல உள்ள தமிழுக்கே நாம் தமிழ் படிக்கனும்போல இருந்ததுனால 30 நாள் புக் மூணே நாளில் மூளைக்கு போனது...

    திரும்பவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் நம்பிக்கையை வரவழைத்த வளைப்பதிவாக இருப்பதில் மகிழ்ச்சி... மாஷா அல்லாஹ்... தொடருங்கள்... பிரார்த்தனையுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் சகோ.

      அல்ஹம்துலில்லாஹ் சகோ.
      இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக பயன்படுத்துங்கள். :)

      Delete
  32. அஸ்ஸலாமு அலைக்கும்

    மாஷா அல்லாஹ், நல்ல முயற்சி

    அல் ஹம்துலில்லாஹ் இனி நானும் ஆங்கிலத்தில் உரையாட கற்றுகொள்ளலாம் :)

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் பாய்,

      கண்டிப்பா கத்துக்குங்க :)

      பாராட்டுக்களுக்கு நன்றி, வஸ் ஸலாம் :)

      Delete
  33. டீச்சர், நல்லா இருக்கீங்களா? ஏன் வாராவாரம்?? டெய்லி சொல்லிக் கொடுக்க மாட்டீங்களா? (ஹை ஜாலி..!!) :)))))

    ReplyDelete
    Replies
    1. வாராவாரம் எழுதவே நேரம் அமைய மாட்டேங்குது பாய்.... நீங்க என்னடான்னா கிண்டல் அடிக்கிறீங்க :))

      Delete
  34. masha allah.. tis site s very use full to all.. just now i got this site... insha allah hope i will learn english easily with in a short period. thanks annu sister..

    ReplyDelete
  35. masha allah.. tis site s very use full to all.. just now i got this site... insha allah hope i will learn english easily with in a short period. thanks annu sister..

    ReplyDelete
  36. நல்லதொரு முயற்சி
    எல்லோரும் பயன்பெரும் வகையில் உள்ளது

    ReplyDelete
  37. Assalamu Alaikkum (WRWB),

    Sister... Masha Allah. IT'S GREAT FOR ME LEARN ENGLISH EASILY FROM THIS BLOG.

    Alhamdulillah, May Allah will give you Strength to do thIs work easIly.



    ReplyDelete
  38. maasha allah நல்ல முயற்சி . உங்களுக்கு என் வாழ்த்துக்கள் , தயவு செய்து தினமும் மறக்காமல் பதியுங்கள்

    ReplyDelete
  39. maasha allah, முதலில் உங்களக்கு இறைவன் கிருபை செய்யட்டும், என்னை போல் மேடை பேச்சாளர்களுக்கு இது போல பயிற்சி மிகவும் தேவை, தொடர்ந்து போடுங்கள்

    ReplyDelete
  40. மாநகரங்களுக்கு மேற்படிப்பு/ வேலைக்கு வரும் கிராம மற்றும் பின் தங்கிய பகுதியினருக்கு ஏற்ற வலைத்தளம் . ஆனால் வலைத்தளம் குறித்த அறிமுகம் அவர்களிடையே சென்றடைய அதிக முயற்சி தேவை.
    வெற்றி பெற பிரார்த்தனைகளுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Please leave a decent / encouraging / criticizing word.... not discouraging / offensive or of illicit nature. Thanks !