Monday, October 1, 2012

உரையாடல்


ஓக்கே சகோஸ்,

போன பதிவுல உங்களை எப்படி அறிமுகப்படுத்திக்கிறதுன்னு பார்த்தோம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், கற்றுக் கொண்ட வார்த்தைகளை எப்படி பயன்படுத்துவது என்பது. உங்களுடன் அதிக நேரம் இருக்கக்கூடிய நபர் யாரோ அவருடன் இந்த ஆங்கில உரையாடல்களை அதிகம் அதிகம் தொடருங்கள். அதன் மூலம் அவரின் ஆங்கில அறிவும் கம்மியாயிருந்தால் இருவருமே முன்னேற வழி கிடைக்கும். அல்லது அவரின் ஆங்கில அறிவு போதுமான அளவு இருந்தால் உங்களுக்கு கற்றுத்தர ஏதுவாயிருக்கும்.

இப்படி பயிற்சிகள் செய்ய யாருமே இல்லையெனில்: ஒரு பேப்பரில் இந்த வாசகங்களை எழுதி  ஒரு ரிக்கார்டரில் பதிவு செய்து மீண்டும் மீண்டும் அதனை கேளுங்கள். இதில் எங்கே தவறு என்பது புரியும். ஒரு வார்த்தையின் உச்சரிப்பு தெரியவில்லை என்றால் அருகில் ஆங்கிலம் நன்கு தெரிந்த எவரையோ அல்லது தயக்கம் இருந்தால் (தயக்கத்தை நீங்கள் ஒழிக்காதவரை அது உங்களை முன்னேற விடாது…. நினைவிருக்கட்டும்!!!!)

ஏதேனும்
ஆங்கில சொல்-அகராதி தளத்திற்கு சென்று அங்கே அந்த வார்த்தையைதேடுபொறியில் தேடினால், அதன் விளக்கங்களோடு சொல் உச்சரிப்பின்ஒலிவடிவமும் கிடைக்கும்.
உதாரணமாக மெரியம் வெப்ஸ்டர் சொல்-அகராதி தளத்தில் ‘like’ என்னும் வார்த்தைக்கு பொருளும், அதனை உபயோகப்படுத்தும் விதத்திற்கான உதாரணங்களும் கூடவே ஒலி வடிவ உச்சரிப்புக்கான ஸ்பீக்கர் வடிவ சின்னமும் காணுங்கள்.
http://www.merriam-webster.com/dictionary/like

தயக்கம் இன்னும் போகவில்லை, ஆனாலும் வேறு வழியில்லையா என்பவர்களுக்காக ஒரு உபாயம். இது தற்போதைக்கு மட்டுமே பழகுங்கள். காலம் செல்ல செல்ல மக்களோடு பேசவும் ஆரம்பித்தால்தான் தாழ்மையுணர்விலிருந்து விடுபடுவீர்கள்இன்ஷா அல்லாஹ்

சரி, அந்த அடுத்த உபாயம் என்னவென்றால், கண்ணாடி முன் நின்று உங்களுக்கு நீங்களே உரையாடல் நடத்திப் பாருங்கள்அல்லது உங்களை யாரேனும் பேட்டி எடுப்பதாய் கற்பனை செய்து கொண்டோ / பெரிய ஸ்டேஜில் பேசுவது போலவோ கற்பனை செய்து கொண்டு கற்றுக் கொண்ட வார்த்தைகளை வைத்து பேசிப் பாருங்கள். திக்காமல், திணறாமல், கேள்விகளுக்கு நிதானமாக அதே நேரம் நன்கு புரிந்து கொண்டு பதில் சொல்லும் பொறுமை வரும்வரை பேசிப் பழகுங்கள். உங்களின் நாவிலிருந்து உச்சரிக்கப்படும் வார்த்தையே உங்களின் மூளையில் பலமாக ரிக்கார்டாகும். எனவே திரும்ப திரும்ப உரக்க நீங்கள் பேசுவதும், அதை நீங்களே செவிமடுத்து வேறு ஏதேனும் ஒரு மீடியம் மூலம் அதை சரி செய்வதின் மூலம் எளிதாக அதை மனதில் புகுத்தி விடலாம். பயிற்சி எளிதாகும் வழியே இது

 சரி, இப்ப இந்த வார பாடத்தை பார்க்கலாம். போன பதிவில் உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்த்தோம். இந்த வாரத்தில் அந்த அறிமுகத்தை (பின்புலத்தில் ஒரு அலுவலகத்தைக் கொண்டு) எப்படி கொண்டு செல்வது எனப் பார்ப்போம். குலாமும் பாஸித்தும் ஒரு அலுவல நேர்முகத்தேர்வில் சந்தித்துக் கொள்கிறார்கள். இனி,
குலாம்: Hi, My name is Gulam. May I know about you? (கவனியுங்கள் இது ஃபார்மல் formal-ஆக பேச வேண்டிய இடம். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களான பின் informal / casual tone உபயோகிக்கலாம். ஆனால் அலுவலகத்தில் இப்படி பேசுவதே சிறந்தது..!!)
பாஸித்: Hello… I am Basith. I am from Chennai and where are you from? (இங்கிருந்து பாஸித் தன் உரையாடலை வளர்க்கிறார். பொதுவாகவே இந்தக் கேள்வியானது எடுத்தவுடன் சந்திக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். எனவே உங்களின் ஊரைப் பற்றி சொல்லுபோது ஊரைப் பற்றிய சில ஸ்பெஷல் விஷயங்களையும் ஆங்கிலத்தில் விவரிக்கத் தெரிந்து வைத்திருப்பது நல்லது!!)
இங்கே குலாம் சார்பில் தரக்கூடிய பல வித பதில்களைக் காண்போம்.
1.   Oh… I am also from Chennai… which part of Chennai are you? (or)
a.   ஓஹ்…. நானும் சென்னைதான். சென்னையில் நீங்க எந்தப் பக்கம்? / எங்க இருக்கீங்க?
2.   Ok.. I am from Nagoor. Have you ever been?
a.   ஓகே. நான் நாகூர்(இல் இருந்து வருகிறேன்.) நீங்க (நாகூருக்கு) வந்திருக்கீங்களா??
3.   Wow… Glad to know that. Though my native is also Chennai, I am born and brought up in Trichy.
a.   வாவ்…. கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும் சொந்த ஊர் சென்னைதான். ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சியில்.
4.   Oh Is it? I am from the eastern part of India, West Bengal.
a.   ஓஹ்அப்படியா? நான் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து (வருகிறேன்), மேற்கு வங்காளம்.

இந்தப்
பகுதியில் சில அதிக விஷயங்களை நாம் கற்றுக் கொண்டுள்ளோம். முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே பதில், ஒரே விதத்தில்தான் நாம் தரவேண்டும் என்கிற மனப்பான்மையை மாற்ற வேண்டும். இதனால் குறுகலான வழி நீங்கி அதிக வாசகங்களையும் வார்த்தைகளையும் கற்று நாம் மேலே மேலே முன்னேற முடியும். பாஸித்தின் அதே கேள்விக்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும்?? கீழே பின்னூட்டமிடுங்களேன். இந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாக்கியங்களை இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை ஆழ்ந்து படிப்போம்.

இனி
. போன பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளின் பதில்கள்:
1.   Hi. I am Joseph. I am travelling to Bombay. How about you? (இந்த How about you என்னும் வாக்கியம் தோழமை உணர்வுடன் கூறப்படுவதுஎனவே இந்த casual settingஇல் அழகாக பொருந்துகிறது.)
2.  
Hello, I am Nisha. I am your new neighbor. Are you free now? (
நிஷா ‘neighbour’ என்னும் பதத்தின் மூலம் தன்னை அண்டை வீட்டுக்காரரிடம் எவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்கிறார் என கவனியுங்கள். அடுத்து, எல்லா வீட்டுப் பெண்களுமே, கணவன் வேலைக்கு சென்றதும் சில மணி நேரங்களுக்கு பிஸியாக இருப்பார்கள். அதிலும் மேலை நாட்டினரில் பலர் வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களாக இருப்பார்கள். அப்படியிருக்கும்போது அவர்கள் இப்போது பேச தயாராக இருக்கிறார்களாஅவர்களின் வேலை நேரத்தை நாம் கெடுக்கிறோமா என்பதை கவனித்து நட்பை வளர்ப்பதே நமக்கும் மரியாதை தரும், நம் நட்புக்கும்எனவேதான் நிஷா, “இப்ப ஃப்ரீயாக இருக்கீங்களா / Are you free now?என்று கவனமாக கேட்டுக் கொள்கிறார்கள்.
3.   Hi Mam / Hello Sir, I am Varun and this is my wife Sneha. Our Son Kishan, is studying in fourth grade, here.(or in this school or is in Miss Julie’s class)
(
இது ஒரு வகை மட்டுமேஇன்னும் பல விதத்திலும் அறிமுகம் செய்து கொள்ளலாம்….கவனிக்க வேண்டிய ஒரே விஷயம்…..என்ன???? சொல்லுங்கள் பார்ப்போம்:))
இந்த வெள்ளி மீண்டும் சந்திப்போம் சகோஸ்…. அதுவரை உரையாடலை அழகாக வளர்த்துங்கள்:)
Have a Great Day ..!


26 comments:

 1. Replies
  1. sister....

   I just replied to all your comments. You are really doing great. keep the spirits up :)

   Delete
 2. நல்லொதொரு முயற்சி!

  ReplyDelete
  Replies
  1. ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி சகோ. :)

   Delete
 3. ஸலாம்

  நானும் தலைகீழா நின்னு படிச்சு பார்கிறேன் ... ஆங்கிலம் வர மாடிகிது ...

  நான் செய்த முயற்சி ...

  DICTIONARY மெமரி பண்ணேன் ... ஆனால் மறந்துருச்சு ...
  RADIDEX படிச்சேன் ... படிக்க நல்லா இருந்தது , ஆனால் பேச தான் வர மாட்டிக்குது .
  VETA ENGLISH SPEAKING COURSE போன்னேன் .. ஒரு பாயிதா கூட கிடைக்கலை ...

  இப்பையும் ரபிடெக்ஸ் தான் படிக்கிறேன் ...

  புரியுது , ஆனால் பேச வர மாடிகுது ..

  நான் சொல்ல வேண்டியவுகல்ட சொல்லி பார்த்தேன் ... அவுக மனசு வைக்க மாட்டிகிராக ... நானும் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன் அவுகல்டா ...

  ரப்பி ஜித்னி இல்மா .. இறைவா எனக்கு கல்வி ஞானத்தை அதிகபடுத்துவாயாக ..

  PERHAPS மரபணு ப்ரோப்லேம் ஆ இருக்குமா ...

  BCOZ இந்திய சுதந்திரம் வாங்க ஆங்கிலம் கற்பது ஹராம் ன்னு முஸ்லிம்கள் போராடுநாங்கள ... அதுவா இருக்குமோ என்னோவோ .. MAY BE..


  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ ஹா.... perhaps it is because may be you are wrong in working it out :))

   முயற்சியை மட்டும் விட்டு விடாமல் தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்.

   Delete
 4. முஸ்லிம்கள் என்றாலே பொதுவானவற்றைப் பற்றிப் பேசமாட்டார்கள் / எழுதமாட்டார்கள் என்பது போன்ற ஒரு கருத்துருவாக்கம் பதிவர்களிடையே நீண்டகாலமாகவே உண்டு. அதைப் போக்கும் வகையில் உங்கள் முயற்சி அமைந்துள்ளது. வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா....என்ன இப்படி சொல்லிட்டீங்க.... ஹுஸைனம்மா அக்கா, முஹம்மது ஆஷிக் பாய், ஹைதர் அலி பாய், மனிதாபிமானி, அப்துல் பாஸித் சகோ, அப்துல் காதர் பாய், ஜெய்லானி பாய், சினேகிதி சகோ, ஜலீலா அக்கா என இன்னும் பலர் இருக்கிறாங்க சகோ.... மார்க்கத்தோடு சேர்த்து மற்ற நல்ல பதிவுகளையும் சேர்ந்தே தருவதற்கு. கண்டிப்பாக அவற்றையும் பாருங்கள். :)

   Delete
 5. salam annu...!

  masha allah.. nice explanations..! realy u r doing a gr8 job.. thank you so much dear ( correct me if m wrong ok :D )

  ReplyDelete
  Replies
  1. Hello....

   Do you mean to say that you are weak in English.... may be weak in accepting the truth :))))

   Why dont you join me ??? :)))

   Delete
  2. ofcz m weak in grammer annu :( dats wat make me feel low.. and m nt gud in pronounciations also..! :/

   /Why dont you join me ??? :)))// insha allah.. first i have to learn alots of things in english.. then sure i'll join u dear :)

   Delete
 6. Hello sister!

  just now i got free time and read this post with listening audio.

  My main problem on english is, "Pronounciation".

  My colleague correcting it often.

  Its better to learn with audio. Thank you sister!

  ReplyDelete
  Replies
  1. Basith,

   Masha Allah. You are really trying well. My only advice would be to think of yourself as a baby and talk without worries.... no baby learns spelling and grammar first.... so go ahead, as you move forward, you will learn more and accomplish more....insha Allah. :)

   Delete
 7. //பாஸித்தின் அதே கேள்விக்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும்??//

  என் கேள்விக்கு நானே பதில் சொல்லனுமா?

  :) :) :)

  ReplyDelete
 8. அட, நல்ல முயற்சி,, நல்ல பயிற்சியும்,,,

  இனி தவறாம வந்துடலாம்...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக வாங்க :)

   Delete
 9. //பாஸித்தின் அதே கேள்விக்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும்??//

  என் கேள்விக்கு நானே பதில் சொல்லனுமா?

  -----

  பாஸித்...எப்படியெல்லாம் டீச்சர் படிக்க அழைக்கிறாங்க பாருங்க? ( உங்க...பேர போட்டு, எங்க.. ஊர் பேர போட்டு??) இப்படிப் பட்ட டீச்சர் கிடைக்குமா? அவ்வ்வ்வவ் :))

  ReplyDelete
  Replies
  1. ஏன்ன்ன்ன்ன்ன்??? :)))))))))))))))))))

   Delete
 10. இது ஒரு நல்ல முயற்சி சகோதரிக்கு பாராட்டுக்கள் ஜசாக்கல்லாஹு ஹைரன்,ஆனால் மைதீன்பாய் சொன்னதுபோல் ஆங்கிலஇலக்கணம் என்பதை முதலில் நன்றாக புரியவைக்கணும் அப்பத்தான் மண்டைலே ஏறும்,

  ReplyDelete

Please leave a decent / encouraging / criticizing word.... not discouraging / offensive or of illicit nature. Thanks !