ஹெல்லோ சகோஸ்,
How are you? இன்றைய பாடத்துக்கு போகலாமா? முதல் பதிவுல நிஷாவை பார்த்தோம் இல்லையா? நிஷாவின் அண்டை வீட்டுக்காரியான ஜெனிஃபரையும், நிஷாவையும் இதிலே உரையாட சொல்வோம்? என்ன சம்மதமா??
Jennifer: Hello… Please come in. I am Jennifer, call me Jenny.
Nisha: Oh Hi Jenny..
Jennifer. Take a seat, Nisha. Please be yourself.
Nisha: Thank you :)
இப்ப மேல பார்த்தீங்கன்னா, ஜெனிஃபரும் நிஷாவும் கேஷுவலா உரையாட ஆரம்பிக்கிறாங்க.... இந்த மாதிரி எடத்துல madam / sir / kindly / request இந்த மாதிரியான ஃபார்மல் வார்த்தைகளை தவிர்ப்போம். ஜென்னியின் முதல் வாக்கியமே என்ன, என்னை ‘Jenny'ன்னு கூப்பிடுங்கங்கறதுதான். அதே போல நிஷாவையும் ஃபார்மலா நினைக்க வேண்டாம் என்பதற்காக, ‘Please be yourself' அப்படின்னு சொல்றாங்க. அதாவது, (சிரமப்படாதீங்க) யதார்த்தமா, நீங்க உங்க வீட்டுல எப்படி இருப்பீங்களோ அப்படி இருங்க.... இந்தளவு வாக்கியம் ஆங்கிலத்துல இல்லையேன்னு சொன்னாக்க.... ஆமா சகோஸ், ஆங்கிலத்துல சுருக்கமா சொல்வதே நிறைய அர்த்தங்களை கொடுக்கும். இப்போ மறுபடியும் ஜென்னி வீட்டுக்கு போகலாம் வாங்க.
Jennifer: How long have you been in US?
Nisha: Ow... Just came couple of days before.
Jennifer: I see.... but you speak English very well.
Nisha: ha ha ha.... I know only a little. Believe me.
சரி.... என்ன எடுத்த உடனே இவ்ளோ பெரிய வாக்கியங்கள் எல்லாம் சொல்றீங்கன்னு கேட்டா.... பயப்பட பயப்பட எதையுமே கத்துக்க முடியாது சகோஸ். இது வாக்கியங்கள் பெரிதா தெரிந்தாலும், வேலை, வெளிநாட்டு வாழ்வு அப்படின்னெல்லாம் போறப்ப ஈஸியா எல்லாரிடமும் பழக தெரியணும். அப்ப தடங்கல் இல்லாம பேச தெரியணும். ஒவ்வொரு வாக்கியமா பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.
இப்ப Jenny என்ன கேட்டாங்க? How long have you been in US? அதாவது எப்பலேர்ந்து அமெரிக்காவில இருக்கீங்க? ‘How' ன்றது ’எப்படி’ ங்கற அர்த்தம்தானே தரும், அப்ப ‘எப்படி இவ்ளோ நாளா அமெரிக்காவிலே இருந்தீங்க’ன்னு கேட்பதுதானே சரி??? சரியா?? இல்லை சகோஸ்.... அப்படி இல்லை. ’Long'ன்றது நீளத்தை மட்டும் குறிப்பிடுவது இல்லை.
‘long / லாங்’ அப்படின்னா
- நீளத்தை குறிக்கலாம் (A long stick -- ஒரு நீளக்குச்சி);
- குறிப்பிட்ட நேரத்தை குறிக்கலாம் (A long while -- ஒரு நீண்ட / நிறைய நேரம் / நெடுங்காலம்);
- அதிக எண்ணிக்கை கொண்டதை குறிக்கலாம் (A long list of students -- பல மாணவர்களின் பட்டியல்)
- குறிப்பிட்ட அளவுகளின் எண்ணிக்கையை குறிக்கலாம் ( It is eight miles long from here. -- அது இங்கிருந்து எட்டு மைல் தொலைவில் உள்ளது);
- தொடர்பு படுத்திப் பார்க்க ஒரு கால அளவைக் குறிக்கலாம் ( It's a long story -- அது ஒரு பெரிய கதை)
குறிப்பு:
[It's -- என்றால் அதாவது ‘ஒற்றை நிறுத்தக் குறியுடன்’ இருந்தால் அதை ‘It is' என்று படிக்க / பேச வேண்டும். “அது” என்னும் அர்த்தம் தரும்.]
It's a movie -- அது ஒரு திரைப்படம்.
[Its -- என்றால், அதாவது நிறுத்தற்குறி இல்லாமல் இருந்தால் அதை ‘இட்ஸ்’ என்றே படிக்க / பேச வேண்டும். ’அதனுடைய’ என்னும் அர்த்தம் தரும்.]
Its his pen. - அது அவனுடைய பேனா.
சரி, இன்றைய பாடம்:
கீழ் வரும் வாக்கியங்களில் Long என்னும் சொல் எந்த அர்த்தத்தை தருகிறது என்று கூறுங்களேன்.
1. It took long enough to forget her.
2. It was a long winter.
3. Long skirts look pretty.
4. Long ago, there was a king.
5. You took so long, where were you?
கண்டிப்பாக பதில் எழுத பேச முயற்சி செய்ங்க. சரியா?? போன பதிவில், வருன் பற்றிய குறிப்பில், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்று கேட்டேன். அது, வருன் சந்திப்பது அலுவலக ரீதியில் சேரும் / ஃபார்மல் ஆகும். சரியா? அதனால் மேடம் / மிஸ் / சார் என்பவை சரளமாக புழக்கத்தில் வரும்.