ஹெல்லோ சகோஸ்,
How are you? இன்றைய பாடத்துக்கு போகலாமா? முதல் பதிவுல நிஷாவை பார்த்தோம் இல்லையா? நிஷாவின் அண்டை வீட்டுக்காரியான ஜெனிஃபரையும், நிஷாவையும் இதிலே உரையாட சொல்வோம்? என்ன சம்மதமா??
Jennifer: Hello… Please come in. I am Jennifer, call me Jenny.
Nisha: Oh Hi Jenny..
Jennifer. Take a seat, Nisha. Please be yourself.
Nisha: Thank you :)
இப்ப மேல பார்த்தீங்கன்னா, ஜெனிஃபரும் நிஷாவும் கேஷுவலா உரையாட ஆரம்பிக்கிறாங்க.... இந்த மாதிரி எடத்துல madam / sir / kindly / request இந்த மாதிரியான ஃபார்மல் வார்த்தைகளை தவிர்ப்போம். ஜென்னியின் முதல் வாக்கியமே என்ன, என்னை ‘Jenny'ன்னு கூப்பிடுங்கங்கறதுதான். அதே போல நிஷாவையும் ஃபார்மலா நினைக்க வேண்டாம் என்பதற்காக, ‘Please be yourself' அப்படின்னு சொல்றாங்க. அதாவது, (சிரமப்படாதீங்க) யதார்த்தமா, நீங்க உங்க வீட்டுல எப்படி இருப்பீங்களோ அப்படி இருங்க.... இந்தளவு வாக்கியம் ஆங்கிலத்துல இல்லையேன்னு சொன்னாக்க.... ஆமா சகோஸ், ஆங்கிலத்துல சுருக்கமா சொல்வதே நிறைய அர்த்தங்களை கொடுக்கும். இப்போ மறுபடியும் ஜென்னி வீட்டுக்கு போகலாம் வாங்க.
Jennifer: How long have you been in US?
Nisha: Ow... Just came couple of days before.
Jennifer: I see.... but you speak English very well.
Nisha: ha ha ha.... I know only a little. Believe me.
சரி.... என்ன எடுத்த உடனே இவ்ளோ பெரிய வாக்கியங்கள் எல்லாம் சொல்றீங்கன்னு கேட்டா.... பயப்பட பயப்பட எதையுமே கத்துக்க முடியாது சகோஸ். இது வாக்கியங்கள் பெரிதா தெரிந்தாலும், வேலை, வெளிநாட்டு வாழ்வு அப்படின்னெல்லாம் போறப்ப ஈஸியா எல்லாரிடமும் பழக தெரியணும். அப்ப தடங்கல் இல்லாம பேச தெரியணும். ஒவ்வொரு வாக்கியமா பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.
இப்ப Jenny என்ன கேட்டாங்க? How long have you been in US? அதாவது எப்பலேர்ந்து அமெரிக்காவில இருக்கீங்க? ‘How' ன்றது ’எப்படி’ ங்கற அர்த்தம்தானே தரும், அப்ப ‘எப்படி இவ்ளோ நாளா அமெரிக்காவிலே இருந்தீங்க’ன்னு கேட்பதுதானே சரி??? சரியா?? இல்லை சகோஸ்.... அப்படி இல்லை. ’Long'ன்றது நீளத்தை மட்டும் குறிப்பிடுவது இல்லை.
‘long / லாங்’ அப்படின்னா
- நீளத்தை குறிக்கலாம் (A long stick -- ஒரு நீளக்குச்சி);
- குறிப்பிட்ட நேரத்தை குறிக்கலாம் (A long while -- ஒரு நீண்ட / நிறைய நேரம் / நெடுங்காலம்);
- அதிக எண்ணிக்கை கொண்டதை குறிக்கலாம் (A long list of students -- பல மாணவர்களின் பட்டியல்)
- குறிப்பிட்ட அளவுகளின் எண்ணிக்கையை குறிக்கலாம் ( It is eight miles long from here. -- அது இங்கிருந்து எட்டு மைல் தொலைவில் உள்ளது);
- தொடர்பு படுத்திப் பார்க்க ஒரு கால அளவைக் குறிக்கலாம் ( It's a long story -- அது ஒரு பெரிய கதை)
குறிப்பு:
[It's -- என்றால் அதாவது ‘ஒற்றை நிறுத்தக் குறியுடன்’ இருந்தால் அதை ‘It is' என்று படிக்க / பேச வேண்டும். “அது” என்னும் அர்த்தம் தரும்.]
It's a movie -- அது ஒரு திரைப்படம்.
[Its -- என்றால், அதாவது நிறுத்தற்குறி இல்லாமல் இருந்தால் அதை ‘இட்ஸ்’ என்றே படிக்க / பேச வேண்டும். ’அதனுடைய’ என்னும் அர்த்தம் தரும்.]
Its his pen. - அது அவனுடைய பேனா.
சரி, இன்றைய பாடம்:
கீழ் வரும் வாக்கியங்களில் Long என்னும் சொல் எந்த அர்த்தத்தை தருகிறது என்று கூறுங்களேன்.
1. It took long enough to forget her.
2. It was a long winter.
3. Long skirts look pretty.
4. Long ago, there was a king.
5. You took so long, where were you?
கண்டிப்பாக பதில் எழுத பேச முயற்சி செய்ங்க. சரியா?? போன பதிவில், வருன் பற்றிய குறிப்பில், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்று கேட்டேன். அது, வருன் சந்திப்பது அலுவலக ரீதியில் சேரும் / ஃபார்மல் ஆகும். சரியா? அதனால் மேடம் / மிஸ் / சார் என்பவை சரளமாக புழக்கத்தில் வரும்.
Salaam sako Annu,
ReplyDeleteKeep the spirits high ... !! what does it mean??? you forgot to explain that... avvvvvvvv....
Nevertheless, very good post. Keep up the good work.
Brother,
DeleteAs if you dont know :)))))
Jazakallaahu Khayr for the encouragement :)
பயனுள்ள பதிவு. எனது பதிவிலும் லிங்க் கொடுத்துள்ளேன்.
ReplyDeleteஜஸாகுமுல்லாஹு க்ஹைர் பாய். பார்த்தேன்... மிக்க சந்தோஷம்.
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்...
ReplyDeleteஎங்க யாரையும் காணோம்...
எல்லோரும் லீவா.....
வ அலைக்கும் அஸ்ஸலாம்..... :))
Deleteநானும் english ல வீக்குங்க...
ReplyDeleteஅதுல 3 ஐ தவிற மற்றயவை காலத்தின் வரையரையை யை குறிக்கிறதா....்னியுஙடகள
அதுவும்..கணக்கிட முடியாத காலத்தை குறிப்பதா...?
தப்பாக கேட்டிருந்தால் மன்னியுங்கள் teacher
தப்பா கேட்க இதுல எதுவுமே இல்லை சகோ :))
Deleteஆனால் பதில் நான் சொல்ல் மாட்டேன்.... இன்னும் யோசியுங்கள் :))
பயன் தரும் பதிவு. நம்மவர்கள் பலரு ஆங்கிலத்தில் புலி என நினைத்து இங்கு வந்து சூடுப்பட்ட பூனையாகிய கதைகள் பல, ஆங்கில மொழியை பிழையில்லாமல் , உச்சரிப்பு, இலக்கணம், மற்றும் மரபு சொல்லை முறையாக பயன்படுத்தி எளிமையாக பேச முடியும் .. கொஞ்சம் பயிற்சி எடுத்தால் போதுமானது .. தொடர்க..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)
Deleteo.k teacher: fine
ReplyDeleteஸலாம் அழைக்கும் டீச்சர் ...
ReplyDeleteநிஷாவும் , ஜென்னிபிரும் ஸலாம் சொல்ல மாட்டாங்களா .. ஓகே .. அதா விடுங்க போன் ல தானே எல்லாரும் ஹலோ சொல்லுவோம் .. நேர்லயும் சொல்லலாமா ...
//please be yourself // க்கு பதிலா don't be formal ன்னு சொல்லலாமா ...
அடுத்த தடவ யாரு பேரையாவது போட்டு லிங்க் கொடுங்க ... அவுங்களுக்கும் விளம்பரம் கிடைச்சு பெரியாள் ஆயிருவாங்க ...
நான் வெளிநாட்டு ல இருந்துகிட்டு இங்கிலீஷ் பேச தெரியாம கேவலமா இருக்கு ... இதுல என்னா ஒரு விஷயம் ஆபீஸ் பாய் கூட நல்லா பேசுறான் ... நான் தான் .? நினைக்கவே வருத்தம் ..
anyway course intermediate level kku kondu vaanga... பதிவ படிச்சுட்டேன்
don't be formal ன்னும் சொல்லலாம் :))
Delete//அடுத்த தடவ யாரு பேரையாவது போட்டு லிங்க் கொடுங்க ... அவுங்களுக்கும் விளம்பரம் கிடைச்சு பெரியாள் ஆயிருவாங்க ...//
உங்களிலிருந்தே ஆரம்பிச்சுடறேன் சகோ :))
//anyway course intermediate level kku kondu vaanga... பதிவ படிச்சுட்டேன்
இல்ல பாய்.... நம்மவர்களுக்கு எளிதான வழியில் தினமும் பேசும் பேட்ட்ர்ன்ஸ் வைத்தே கொண்டு செல்ல விரும்புகிறேன்.... இன்ஷா அல்லாஹ்... தொடர்ந்து வாங்க :))
அடடே.... இதுவும் நடக்குதா....மாஷா அல்லாஹ்... நடத்துங்கள்..... வாழ்த்துக்கள்..;))
ReplyDeleteநன்றி சகோ :))
Deletepast couple of days i had some work..so i can't see your post. very useful post..
ReplyDelete1. It took long enough to forget her. அவளை மறக்க நீண்ட நாள் ஆனது
ReplyDelete2. It was a long winter. அதிக நாட்களாக குளிர் இந்தது
3.Long skirts look pretty. நீளமான ஸ்கர்ட் அழகாக இருக்கு
4. Long ago, there was a king. ரொம்ப நாளுக்கு முன்பு ஒரு அரசன் இருந்தான்.
5. You took so long, where were you? சாரி அன்னு என்னக்கு இது புரியவில்லை
1. correct. 'நீண்ட நாட்கள் / நீண்ட காலம்’ என்பது சரி.
Delete2. No. இதை ‘அது ஒரு நீண்ட குளிர்காலம்’ என புரிந்து கொள்ள வேண்டும் சகோ.
3. சகோ...இது ஒரு ‘general truth' என்பார்கள். அந்த வகையை சேர்ந்தது. அதாவது, சூரியன் இன்ரு கிழக்கில் உதித்தது என்போமா??? இல்லை... அது எப்பொழுதுமே கிழக்கில்தான் உதிக்கும். எனவே சூரியன் கிழக்கில் உதிக்கும் என்போம்.. அது போல ‘நீளமான பாவாடைகள் அழகாக இருக்கும்’ என்பதே சரி :))
4. சகோ.... காலத்தை பற்றி குறிப்பிடும்போது, நிச்சயமாக நாட்கணக்கா, மாதக்கணக்கா...வருடக்கணக்கா என்று தெரியாதபோது ‘காலம்’ என்றே குறிப்பிட்டு பழகுங்கள். ‘பல காலம் முன்பு’ / ‘சில காலம் முன்பு’ என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
5. இது அதிகமாக நாம் உபயோகிக்கும் வாக்கியம் சகோ... “நீ ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டாய்... எங்கே இருந்தே??” --- சரியா?? :))
ஆனா ஃபாயிஜா சிஸ்டர், என் பதிவுகளின் மூலம் கிடைத்த ஒரு ‘முன்னேற முயற்சி எடுக்கும் சகோதரி’ மாஷா அல்லாஹ்.... மிக்க சந்தோஷம் கிடைக்கிறது... உங்களின் முயற்சிகளைப் பார்க்கும்போது.... அல்ஹம்துலில்லாஹ் :))
அன்னு முயற்சி எடுக்க ஆரம்பித்துவிட்டேன். சொன்னால் நம்பமாட்டிங்க. இப்ப எனக்கும் சுத்தமாக டைமில்லை. என் மகள் லேப் பக்கமே என்னை உட்காரவிடுவதில்லை. உங்கள் ப்ளாக் மட்டும் தான் நான் இப்ப செக் பண்ணுகிறேன். என் ப்ளாக் கூட பார்க்க டைமில்லை. இனியும் ஆங்கிலம் கற்காமல் இருப்பது சரியில்லை.. உங்கள் பக்கத்தினை அப்படியே போனில் ஸ்கிரின் பிரிண்ட் எடுத்து அப்ப அப்ப பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.. நீங்க ப்ரீ யான பின்பு சொல்லுங்கள்.. சில வாங்கியங்கள் எப்படி பேசனும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜசாக்கல்லாஹ் கைர்
DeleteNo reply... no post what happend
ReplyDelete@சிநேகிதி..
ReplyDeleteஅவங்க 3 நாளா பிசியா இருக்காங்க.. இன்ஷா அல்லாஹ் இன்றோ நாளையோ மீண்டும் வந்துடுவாங்க... அதுவரை பொறுமை காக்கவும் :-)
ரொம்ப நன்றி ஆமி.... ஆமாம்.... இந்த வாரம் கணிணிக்கு முன்னும் பின்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய வேலை .... எனவேதான் இந்த தடங்கல். இன்ஷா அல்லாஹ் இன்றிரவு பதிவு போட்டு விடுகிறேன்.... தடங்கலுக்கு மன்னிக்கவும் சகோஸ் :)
DeleteThank you :)
ReplyDeleteஅன்னு இந்த ஆங்கிலபாடங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் பயன்படும்.
ReplyDeleteநல்ல முயற்சி வாழ்த்துக்கள், நானும் முடிந்த வரை அனைவருக்கும் லின்க் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்,
ஜலீலாக்கா.... உங்க கமெண்ட் உண்மையிலேயே ரொம்ப தெம்பை தருது.... ஜஸாகுமுல்லாஹு ஹைர் :)
Deleteஅஸ்ஸலாமு அழைக்கும் சகோஸ்!
ReplyDeleteபாடம் புரிந்தது. ஒரு டவுட்!
//It's -- என்றால் அதாவது ‘ஒற்றை நிறுத்தக் குறியுடன்’ இருந்தால் அதை ‘It is' என்று படிக்க / பேச வேண்டும். “அது” என்னும் அர்த்தம் தரும்//
can't என்பதை எப்படி படிக்க வேண்டும்?
???
Deleteஅதை காண்ட் என்று படிக்க வேண்டும் சகோ. can't என்பது can not என்பதின் மரு. எனவே பேசும்போது கென்னாட் என்றாலும் சரி, காண்ட் என்றாலும் சரி... இரண்டுமே சரியான உச்சரிப்பே.
Delete