சகோஸ்....
முதல் ஃபோனிக்ஸ் பதிவில் ஃபோனிக்ஸ் வழியில் சில எழுத்துக்களைப் பார்த்தோம். இன்று மீதமுள்ள எழுத்துக்களையும் பார்த்து விடுவோம் இன்ஷா அல்லாஹ்.
ம்ம்... இப்படி உச்சரிப்பு ஒலியை / phonicsஐ பழக்கினால் மட்டுமே குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பிக்கையில் எளிதாக இருக்கும். உங்களுக்கும். ஆனால் எழுத்தின் பெயர், ஏ, பி, சி... என்று பழ(க்)கினீர்கள் என்றால் அதன் பின் புதிய சொற்களை உச்சரிக்கப் பழகும்போது மிகுந்த தடுமாற்றம் கிட்டும். எனவே இன்ஷா அல்லாஹ் இந்த உச்சரிப்பையே பழகுங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெரியப்படுத்தவும்.
என் பிள்ளைகளுக்கு Phonics சொல்லித் தர சில யூடியூப் விடியோக்கள் மிகுந்த பலனளித்தன. அவை உங்களுக்கும் :)
மீண்டும் சந்திக்கும் வரை.... :)
முதல் ஃபோனிக்ஸ் பதிவில் ஃபோனிக்ஸ் வழியில் சில எழுத்துக்களைப் பார்த்தோம். இன்று மீதமுள்ள எழுத்துக்களையும் பார்த்து விடுவோம் இன்ஷா அல்லாஹ்.
- n - ந் - ந -- நம்பர் - Number -- ஒரே ஒரு ‘ந’தான் ஆங்கிலத்தில் உள்ளது. எனவே அதை சரியாக உச்சரிக்கவேண்டும். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - name | nail | nut | nose | neem | nay
- o - ஆ -- ஆம் இந்த எழுத்தின் உச்சரிப்பும் ‘ஆ’ என்றுதான் வரும். இதை ‘ஓ’ என்று மனனம் செய்யாதீர்கள். சிறு குழந்தைகளுக்கும் ஃபோனிக்ஸ் வழியிலேயே மனனம் செய்ய சொல்லித் தாருங்கள். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - odd | otter | on | off | object | office
- p - ப் - தமிழில் ப என்னும் மெல்லினத்தின் உச்சரிப்பே இங்கே வரும். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - plum | pen | pin | paint | plant
- q - க்யூ - இதை உச்சரிக்கும்போது மட்டும் ஒரு வாக்கியத்தை நினைவில் வையுங்கள். அதாவது, Q and U stick like Glue :). இது எதற்காக சொல்கிறேன் என்றால், எங்கேயெல்லாம் Q வருகிறதோ அங்கேயெல்லாம் U வும் உடன் வருவது தவிர்க்க இயலாதது. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - queen | quail | quilt | quiz | question | quick
- r - ர் - தமிழில் உள்ள மெல்லிய ‘ர’வே ஆங்கிலத்தில் உள்ளது. கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம், ‘ர்’ வை எத்தனை குறைந்த அழுத்தத்தில் உச்சரிக்க முடியுமோ அத்தனை குறைந்த அழுத்தத்தில் உச்சரிக்க வேண்டும். அமெரிக்கர்களை கவனித்தீர்களானால் பேசப்பேச ‘ர’வை விழுங்கி விட்டார்களோ என்றிருக்கும். அத்தனை மெல்லிய ‘ர’ உச்சரிப்பு இருக்கும் அவர்களுக்கு. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - rat | run | rug | red | rail | repair
- s - ஸ் - வட மொழி எழுத்தான ‘ஸ்’ மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளது. இதுவும் ‘ச’ வை விட இன்னும் குறைந்த அழுத்தத்தில் உச்சரிக்கப்படுவது. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - sweet | sun | sat | stick | swan | send
- t - ட் - மெல்லிய ‘ட’ வை உச்சரிக்க இந்த எழுத்தை பயன்படுத்துவோம். தமிழில் உதாரணமாக, அட்டிகை, சுட்டி, போட்டி, இதில் எல்லாம் வரும் ‘ட்டி’ யையே ஆங்கிலத்தில் t என உபயோகிக்கிறோம். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - train | top | tan | tin | turn
- u - அ - இதையும் ‘யூ’ என்று உச்சரிக்கவோ, குழந்தைகளுக்கு பழக்கவோ செய்யாதீர்கள். ‘அ’ என்றே அதிகமாக இது புழங்குவதால் அப்படியே உச்சரியுங்கள். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - bus | but | mud | rug | cup | hug
- v - வ் - இதை தமிழில் உள்ள வ போலவே கீழுதட்டில் அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும். உதடுகளை குவித்தல்ல. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - van | vain | vent | vis | volume | video
- w - வ்- இதை தமிழில் உச்சரிப்பது போலல்லாமல் உதடுகளை குவித்து ‘வாவ்’ என்று சொன்னால் எப்படியோ அப்படி உச்சரிக்க வேண்டும். v க்கும் wக்கும் அப்படி என்ன வித்தியாசம் தெரிந்து விடப் போகிறது என்றால்... கண்டிப்பாக வித்தியாசம் தெரியும். உங்களுக்கு இல்லையென்றாலும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு. எப்படி நாம் ல / ள /ழ வித்தியாசமாய் உச்சரிக்கிறோமோ அதே போல் v / w இரண்டையும் தனித்தனியாக உச்சரித்துப் பழக / பழக்க வேண்டும். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - wagon | win | went | worm | wurst | worst ( wurst, worst இரண்டுமே ஒரே மாதிரி உச்சரிப்பு கொண்டவை. ஆனால் பொருள் வேறு வேறு)
- x - க்ஸ் - அதிகமாக இந்த எழுத்தை ஆரம்பமாக கொண்டு வார்த்தைகள் ஆரம்பிப்பது மிக மிக மிகக் குறைவு. உதாரணமாக - X ray fish / Xmas / Xyst இது போல். ஆனால் அதிகமாக வார்த்தையின் நடுவிலோ, இறுதியிலோ வருவது மிக அதிகம். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - box | fox | exist | fix | maximum | exit
- y - ய் - தமிழில் உள்ள ய’ வின் இடத்தை இந்த எழுத்து உபயோகிக்கிறது.
மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - yellow {ஸ்டைலாக எல்லோ என சொல்லாதீர்கள், சொல்லித்தரவும் செய்யாதீர்கள். இதை யெல்லோ என்றே சொல்ல வேண்டும் :) } yale | yummy | yes | york - z -- இதற்கு தமிழில் சரியான உச்சரிப்பு கிடையாது. ஒரு தனித்துவம் மிக்கதொரு எழுத்தே Z. :) மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - Prize | Whiz | Zentih | Zeal | Zebra | Zoo.
ம்ம்... இப்படி உச்சரிப்பு ஒலியை / phonicsஐ பழக்கினால் மட்டுமே குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பிக்கையில் எளிதாக இருக்கும். உங்களுக்கும். ஆனால் எழுத்தின் பெயர், ஏ, பி, சி... என்று பழ(க்)கினீர்கள் என்றால் அதன் பின் புதிய சொற்களை உச்சரிக்கப் பழகும்போது மிகுந்த தடுமாற்றம் கிட்டும். எனவே இன்ஷா அல்லாஹ் இந்த உச்சரிப்பையே பழகுங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெரியப்படுத்தவும்.
என் பிள்ளைகளுக்கு Phonics சொல்லித் தர சில யூடியூப் விடியோக்கள் மிகுந்த பலனளித்தன. அவை உங்களுக்கும் :)
மீண்டும் சந்திக்கும் வரை.... :)