Sunday, October 14, 2012

அடிப்படை பாடம் -1

ஹெல்லோ சகோஸ்,

 போன பதிவை கொஞ்சம் ஸ்ஸ்ஸ்ஸ்பீடா எடுத்துட்டு போன பின்தான் முகப்புத்தகத்துல சில சகோக்களுடைய கமெண்ட்ஸ் பார்த்தேன்.... அதாவது ஆங்கில எழுத்துக்களைத் தாண்டி மேலே படிப்பதே சிரமமாக உள்ளது என்று.

 சரி இப்போ இங்கே ரெண்டு வழி இருக்கு.

 1. அவர்களுக்காக அடிப்படை மட்டும் சில டாபிக்ஸ் ஹேண்டில் செய்துட்டு மறுபடியும் பழைய வழியில் போவோம்.

2. இல்லைன்னா வாரத்துல ஒரு பாடம் ரொம்ப பேஸிக்காகவும், இன்னொரு பாடம் இதுவரை நாம் பார்த்த லெவெலுக்கும் போகலாம்.

எந்த வழிமுறை ஒத்து வரும்னு சொன்னீங்கன்னா அந்த வழிமுறைல நாம கொண்டு போகலாம் இன்ஷா அல்லாஹ்..... மறக்காம இதை எனக்கு கமெண்ட் மூலம் சொல்லிடுங்க.... ஏன்னா இந்த தளமே உங்களுக்காகதான்..... நீங்க முன்னேறத்தான்.... சரியா???

 சரி, இன்னிக்கான அடிப்படை -- basic பாடம் -- ‘Sentences - வாக்கியங்கள்'

ஒரு வாக்கியம் முழுமையடைய இரண்டு விஷயம் வேண்டும். Subject + Predicate.

Subject -- சப்ஜெக்ட் அப்படின்னா அந்த வாக்கியத்துல குறிப்பிடப்படும் பொருள் உயிர் / வேலை.

Predicate - ப்ரெடி(க்)கேட் அப்படின்னா அந்த வாக்கியத்தில் உள்ள செயல் / வினை / வேலை.

உதாரணமா: I eat. இதுல I / நான் அப்படின்றது Subject, 'eat' / 'சாப்பிடுகின்றேன்’ என்பது அந்த சப்ஜெக்ட்டுட்டைய வேலை / வினை....எனவே அது predicate. அதிகமா குழம்பிக்காம சின்ன சின்ன வாக்கியங்களாக எழுதி + சொல்லி (இரண்டுமே செய்யுங்கள்... நீங்கள் எழுதியதை நீங்களே படித்தால் இன்னும் மூளையில் பலமாக படியும். #அனுபவம்) முயற்சி செய்து பாருங்கள்.

சில உதாரணங்கள் கீழே:

1. He read. 
2. Dog is barking. (bark- குரைத்தல்) 
3. It is hot. 
4. Wax melts. (melt- உருகுதல்) 
5. I hate. (hate- வெறுத்தல்) 

ஒரு வாக்கியத்தில் இன்னொரு முக்கியமான பகுதி என்னவென்றால் அது ‘Article / ஆர்ட்டிக்கிள்’

ஆர்ட்டிக்கிள்ன்னா என்னன்னு கேட்டீங்கன்னா.... ஒரு பெயர்ச்சொல்லுடன் (ஒரு பொருள் / உயிர் / இடம் / குறிப்பிடப்பட்ட நினைவு) சேர்ந்து அந்த பெயர்ச்சொல் எதனை / எந்தப்பொருளை, எப்படி குறிப்பிடுகிறது என்று குறிப்பது.

உதாரணமாக:
 • I read a book. 
 •  
 • He missed the train. 
 •  
 • She bought an umbrella. 
 •  

மேலுள்ள வாக்கியங்களில் வரும் a / an / the  என்னும் அனைத்தும் ஆர்ட்டிக்கிள் ஆகும். எப்பொழுது எதை உபயோகப்படுத்த வேண்டும்?

1. Definite Article -- The 
The - என்பது ஒரு குறிப்பிட்ட -- ஏற்கனவே நமக்கு(பொதுவாக பேசுபவர், கேட்பவர், இவர்களையும் தாண்டி ஒரு வட்டத்துக்கே பொதுவாக உள்ள) தெரிந்த பொருளை குறிப்பிடும்போது உபயோகிப்பது.

உதாரணம்:
 • The president. (மக்கள் அனைவருக்குமே இது யார் என தெரியவரும்.) 
 • The boy. (இங்கே கேட்பவர் + பேசுபவருக்கு தெரிந்த நபரை குறிப்பிடுகிறார்கள்.)
 • The Qur'an. (உலகுக்கே தெரிந்த புத்தகம். :) ) 

 2. Indefinite Articles -- A / An
A -- ஏ ( ‘யே’என்று உச்சரிக்கக்கூடாது!!) என்பதை எப்பொழுது பயன்படுத்துவோம் என்றால், நமக்கு தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போதும், அல்லது குறிப்பிடாமல் ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி பேசும்போதும் பயன்படுத்துவோம்.

உதாரணம்:

A dog. (இங்கு பொதுவாக ஒரு நாயைப் பற்றி பேசுகிறோம், பக்கத்து வீட்டு நாயோ, நண்பரின் வீட்டு நாயாகவோ இருந்தால் என்ன உபயோகிப்போம்???)

இன்னும் சில உதாரணம்:
 • A hotel. 
 • A bird. 
 • A book. 

An -- ஏன்: இதே போல ஒரு குறிப்பிடாத / நமக்கு பரிச்சயமில்லாத ஒரு பொருளை குறிப்பிடுகையில் அந்தப் பொருளின் முதல் எழுத்து ஒரு Vowel -- வொவெல் -- உயிரெழுத்தில் ஆரம்பித்தால் அதை -- An என்னும் ஆர்ட்டிக்கிள் மூலம் குறிப்பிடுவோம்.

உதாரணம்:
 • An umbrella. 
 • An elephant. 
 • An island. 
 • An apple. 
 • An owl. 

புரிகிறதா?? சரி ஆங்கிலத்தை சரளமாக பழக, இதோ இன்னொரு டிப்ஸ். நீங்கள் எந்த இடத்தில் / ரூமில் அமர்ந்திருக்கின்றீர்களோ அந்த ரூமில் உள்ளவை பற்றி எழுதிப் பாருங்கள். அதை அப்படியே குறைந்தது 3 தடவை சற்றே சத்தமாக உச்சரித்தும் பாருங்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் பூங்காவில் இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ள்லாம். அங்கே இருந்து எதைக் குறித்து எழுதலாம் பேசலாம் எனில்,
 • I am in a park. 
 • Kids are playing. 
 • Beautiful flowers. 
 • There is a yellow kite. 
 • The boy is jogging. 

இப்படி உங்கள் பார்வைக்கு வரக்கூடிய சின்ன சின்ன விஷயங்களை எழுதுங்கள். மூன்று தடவையாவது அதை சத்தமாக படித்து / பேசிப்பாருங்கள்.

இதுவே நீங்கள் வேலை செய்யும் இடத்தில் என்றால்,
 • I work in Satyam company. 
 • Muthu is my colleague. 
 • I work in Java. 
 • My boss has dell laptop. 
 • We work from 8:00 am to 6:00 pm. 

இப்படி எழுதிப் பாருங்கள். நீங்கள் எழுதிய வாக்கியங்களை சரி பார்க்க வேண்டும், யாரும் நகைத்து விடக்கூடாது என்றால் எனக்கு மெயிலில் எழுதுங்கள். இன்ஷா அல்லாஹ் எனக்கு கிடைக்கும் நேரத்தில் உங்களுக்கு பதில் எழுதுகிறேன். அல்லது இங்கே, இந்த தளத்திலும் நேரடியாக கமெண்ட்டில் எழுதலாம்.

சரி சகோஸ்.... உங்களுடைய பதிலை எதிர்பார்த்திருக்கிறேன்.... கூடவே இது வரையிலும் பதிவிடப்பட்ட பாடங்கள் உதவியதா? வேறு எதுவும் மாற்ற வேண்டுமா... எப்படி இன்னும் மெருகூட்டலாம் / உங்களுக்கு பயன்பட வைக்கலாம் என நீங்களே சொல்லுங்கள். அது வரை, Peace be upon you !

.

19 comments:

 1. ஸலாம்

  எனக்கே இருக்கிற ஒரே கவலை ...!!!

  நீங்கள் ஆங்கில இலக்கணம் சொல்லி தரீங்க ...

  தமிழ் இலக்கணம் தெரியாதவங்கலுக்கு எப்படி புரியும் ... :-(

  ஆகவே பல கோணத்தில் சிந்திக்கவும் ... தமிழ் இலக்கணம் தெரிந்தால் தான் ஆங்கில இலக்கணம் இலகுவாகும் ...

  நான் படிக்கும் போது லாம் எப்படி சொல்லி கொடுத்தாங்கன்னா

  வினை சொல் என்றால் என்ன ?

  வினையை குறிக்கும் சொல் வினை சொல் ஆகும் ...

  இதுல என்னா விஷயம் நா வினை டா என்னாண்டே தெரியாதே ...

  இங்கிலீஷ் ல் கிராம்மர் பாத்து பாத்து தான் தமிழர்களால் ஆங்கிலம் பேச முடியவில்லை .. இது தான் உண்மை ..

  எதார்த்தத்தை சொன்னேன் ...

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ,

   தமிழ் இலக்கணம் (என்னைப்போல்!!!) பல பேருக்கு தெரியாது என்பதால்தான் இன்னும் எளிமையாக விளக்கியுள்ளேனே... ‘வினை’ என்பது இலக்கண வார்த்தையாக அல்ல.... பொதுவான மொழியிலும், action என்பதைத் தானே குறிக்கும். அதையும் தாண்டி தெரியாது என்றால், சொல்லுங்கள் சகோ...இன்னும் எவ்வளவு எளிமைப்படுத்த முடிய்ம் என்று பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ் :)

   Delete
 2. அல்ஹம்துலில்லாஹ் மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது... ஜசக்கல்லாஹ் ஹைரன் சிஸ்....

  ReplyDelete
 3. அவ்வ்வ்வ்வ்வ்... ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காதது கிராம்மர் தான். அதனால் இந்த பாடங்களை ஸ்கிப் செய்கிறேன்.

  :D :D :D

  ReplyDelete
  Replies
  1. ஹெல்லோ.... இலக்கணம் இல்லாட்டி ‘எனக்கு பிடிக்கலை’ன்னு கூட எழுத முடியாது :)) தவறாம படிங்கப்பா ப்ளீஸ் :))

   Delete
 4. பலருக்கும் உபயோகமான பதிவு. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இன்ஷா அல்லாஹ் பாய்.
   நன்றி :)

   Delete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி அன்னு, மாஷா அல்லாஹ் சிறந்த முயற்சி,
  உங்கள் தளத்தில் pink, black கலர் கலராக கட்டம் போட்டுள்ளீர்கள் படிக்க கடினமாக உள்ளது. கடத்திற்கு மாற்றமாக அந்த எழுத்துக்களை Bold ஆக போட்டால் நல்ல இருக்கும் என்று தோனுகிறது.

  ReplyDelete
  Replies
  1. மாத்தறேன் பாய்.... கொஞ்ச நாளா ரொம்ப்ப பிசி...அதனால்தான்.... கண்டிப்பாக இரு நாட்களில் மாற்றி விடுகிறேன் இன்ஷா அல்லாஹ் :)

   Delete
 6. கடந்த வாரம் முழுவதும் ரொம்ப வேலை அதான் வரமுடியவில்லை. நீங்க இரண்டுமே கலந்து வாரம் ஒரு நாள் இரண்டு நாட்கள் மட்டுமே அப்டேட் பண்ணுங்க. பயன்னுள்ளதாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. இன்ஷா அல்லாஹ் ஃபாயிஜா ... நினைவில் வைக்கிறேன்... கருத்துக்கு நன்றி. :)

   Delete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி

  ///உதாரணமா: I eat. இதுல I / நான் அப்படின்றது Subject, 'eat' / 'சாப்பிடுகின்றேன்’ என்பது அந்த சப்ஜெக்ட்டுட்டைய வேலை /

  I என்பது நான் இது Subject 'like' விரும்புகிறேன் (இந்த பாடத்தை) எனது அந்த சப்ஜெக்ட்டின் வேலை சரியா சகோதரி

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸலாம் அண்ணா...:)

   You are absolutely right :))

   Delete
 8. //(பொதுவாக பேசுபவர், கேட்பவர், இவர்களையும் தாண்டி ஒரு வட்டத்துக்கே பொதுவாக உள்ள) தெரிந்த பொருளை குறிப்பிடும்போது உபயோகிப்பது.//

  the holy quran இது பொருந்துமா

  ReplyDelete
 9. இந்த பாடம் எனக்கு நன்றாக புரிந்தது மிக எளிமையாக இருந்தது
  பயனுள்ளதாக இருக்கிறது

  ReplyDelete

Please leave a decent / encouraging / criticizing word.... not discouraging / offensive or of illicit nature. Thanks !