Showing posts with label ஆங்கில பாடங்கள். Show all posts
Showing posts with label ஆங்கில பாடங்கள். Show all posts

Thursday, October 11, 2012

கேள்விகள் பலவிதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம் :)

ஹாய் சகோஸ்,

ஸாரி....ஸாரி..... கொஞ்சம் இல்லை... நிறையவே பிஸி ஆயிட்டேன் அதான் எழுத முடியாம போயிட்டுது..... எனிவே.... வாங்க நேரத்தை வீணாக்காம பாடத்துக்கு போகலாம்.....

ஆஃபீஸாகட்டும், அல்லது பக்கத்து வீடாகட்டும், முதல்ல அறிமுகம் ஆனதுமே நாம எதிர்கொள்ளும் பிரச்சினை கேள்விகள்.... நீங்க என்ன செய்யறீங்க... குழந்தைங்க எவ்வளவு.... என்ன படிக்கிறாங்கன்னு ஆரம்பிச்சு, உங்க கொள்ளுத்தாத்தா இன்ஸ்யூரன்ஸ் எடுத்தாரா இல்லையாங்கற வரை போகும். என்ன சொல்ல.... நம்ம இனத்துக்கே curiosity கொஞ்சம் அதிகமே.... :))

உரையாடல் பதிவுலயும் நாம் இதைத்தான் பார்த்தோம்.... குலாமும் பாசித்தும் தங்களை அரிமுகப்படுத்திக் கொள்ளும்போது அடுத்தவரைப் பற்றியும் விசாரித்துக் கொள்வதை. இப்போ, என்னென்ன வார்த்தைகளில் கேள்விகள் கேட்கலாம்ன்னு பார்ப்போம். அதிகமான கேள்விகள் ‘WH' இல்தான் அமையும். அந்த கேள்விகளை சில உதாரணங்களோடு பார்க்கலாம்.

Where? -- எங்கே?

Where is the Masjid?
    மஸ்ஜித் எங்கே உள்ளது?
Where is the justice?
    நீதி எங்கே உள்ளது?

Who? -- யார்? --

Who is the Teacher here?
    இங்கே ஆசிரியர் யாரு?  
Who took the cookie?
    குக்கீயை (பிஸ்கட்டை) யார் எடுத்தது? இதை நல்லா கத்துக்க இந்த வீடியோவை பாருங்க :)) )

When? -- எப்போது

When did you come?
    எப்போ வந்தே / வந்தீங்க? (ஒரு குழுவையே பார்த்துக் கேட்டாலும் இதே தொனிதான்.... மாறாது!!!!)
When are you leaving?
    எப்போ நீ / நீங்க கிளம்புறே / கிளம்புறீங்க?

Which? -- எது?

Which platform are you in?
    நீ எந்த ப்ளாட்ஃபாரத்துல இருக்கே?? (பிச்சைக்கரனைப் பார்த்தும் கேட்கலாம்.... ITகாரனைப் பார்த்தும் கேட்கலாம்.... உங்களுக்கு வேண்டாதவர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்தால்,, இதைக் கேட்ட பின் அந்த பிளாட்ஃபாரத்தை மட்டும் ஸ்கிப் செய்துடலாம்.. ஆங்கிலம் எவ்ளோ உதவியா இருக்கு பாருங்க :)) )
Which book did you pick?
    எந்த புத்தகம் (தேர்ந்து) எடுத்தே?

Whom? -- யாருக்காக?

Whom is this spring palace for?
    இந்த வசந்த மாளிகை யாருக்காக???  :))
Whom are you deceiving?
    யாரை ஏமாத்தறே / ஏமாத்தறீங்க?

Whose? -- யாருடைய

Whose cup is this?
    இந்த கப் யாருடையது?
Whose phone is ringing?
    யாருடையல் தொலைபேசி ஒலிக்கிறது (அலறுதுன்னு கூட சொல்லலாம்.....இல்லே????)

What? -- என்ன?

What did you say?
    நீ என்ன சொன்னே?? / நீங்க என்ன சொன்னீங்க?
What should I do now?
    இப்போ நான் என்ன செய்ய?
What ... for?
    (அது / இது) எதுக்கு ? -- ஒரு குறிப்பிட்ட பொருளையோ / உயிரையோ காட்டி இப்படி கேட்கலாம்? இதனுடைய தேவை என்ன என்று கேட்குமுடத்தில் இப்படி யூஸ் ஆகும். 

What is the strike for?
    இந்த வேலை நிறுத்தம் எதற்காக?
What is it for? (or) For what??
    இது / அது எதுக்கு? (மேலே இருக்கும் இரண்டு விதத்திலும் அந்தக் கேள்வியை கேட்கலாம்)

Why? -- ஏன்/

Why din't you come?
    ஏன் நீ வரவில்லை?
Why are you crying?
    ஏன் நீ அழுகிறாய்?
Why him?
    ஏன் அவன்?? (அதாவது, ஏன் அவனை மட்டும் தேர்ந்தெடுக்கனும்.... என்னும் ரீதியில்... இப்போ எக்ஸாம்ல ஃபெயில் ஆனாக்கூட பரவாயில்லை.... ஆனால் பாஸாயிட்டா சொல்வோமில்லையா.... ஏன் எல்லாரையும் விட்டுட்டு என்னை மட்டும் ஆண்டவன் பாஸாக்கணும்ன்னு.... அந்த ‘ஏன் என்னை மட்டும்’ம்ங்கிற இடத்தில்தான் இது வரும்... Why me? (or) Why me alone ? (alone-ங்கிறது இங்கே ‘தனியா’ன்னு பொருள் தராது-- ‘மட்டும்’ என்கிற பொருள் தரும்.)

Why not?
    ஏன் இயலாது / முடியாது / கூடாது? (இந்த கேள்வி ஒரு எதிர்மறை பதில் மாதிரி.... ஏன் முடியாது? ஏன் அதை செய்ய முடியாது அப்படின்னு கேட்பது. இந்த கேள்விக்கு முன்னர் எந்த வேலையை குறிப்பிட்டு சொன்னாலும் இந்த எதிர் பதில் மாறாது.... உதாரணத்துக்கு, :(இதில் கேள்வி பதில் இரண்டும் ஒரே ஒலியில் கேட்பீர்கள்... ஆனால் கேள்வி ஒருவருடையது, பதில் இன்னொருவருடையது என்று நினைவில் வையுங்கள் இன்ஷா அல்லாஹ்.)
  • I am not cooking today.... Why not? 
  •  
  • I cannot go to school... Why not? 
  •  
  • I think I can't pass this test.... Why not?
  •  

புரியுதா???

இன்னும் சில வேறு வார்த்தைகளின் மூலமும் கேள்விகளை ஆரம்பிக்கலாம்.

Is that ...?

    அப்படியா / அதுவா? (இதை இன்னும் விவரமா சொல்லனும்ன்னா.... Is that a hotel? - அது ஒரு உணவகமா? Is that a reason? -- இதெல்லாம் ஒரு காரணமா?

Is it?

    அப்படியா?
   Is it dead?
        அது செத்திருச்சா??
   Is it true?
        அது உண்மையா?

Is it not?

    அப்படியில்லையா (அல்லது அப்படித்தானே என்னும் பொருள்)
    Is it not Lila?
        அது லீலா இல்லையா / அது லீலாதானே?? 
    Is it not a lie?
         அது பொய்யில்லையா??

Aint it? -- (am not : are not : is not : have not : has not : does not etc etc meaning) 

 இது கொஞ்சம் சென்னைத் தமிழ் மாதிரி.... லோக்கலில்தான் உபயோகம்.... புதிதா யாரையும் மீட் செய்யறப்பவோ அலுவலகத்திலோ இதை உபயோகிப்பது உசிதமல்ல....  அதே போல ‘How' என்று ஆரம்பிக்கும் கேள்விகளும் மிக மிக அதிகம்...  இரண்டையும் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
Bye :)

Friday, September 28, 2012

அறிமுகம் :)


பிஸ்மில்லாஹ் -- இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

சுய அறிமுகம்:
சகோஸ், பொதுவாகவே இந்த இடத்தில்தான் நாம அதிகமா சொதப்புவோம்... என்ன வேலைன்னு கேட்டால் கூட நம்மளுடைய போஸ்ட் அல்லது பொசிஷன் என்னன்னு சொல்லிடலாம்.... ஆனால் சில பேர் அதுல என்ன வேலை செய்வீங்க.... அப்படி இப்படின்னு கேட்க ஆரம்பிச்சா.... அப்புறம் நமக்கு நாக்கு மரத்துப் போயிடும்.... சரி விடுங்க.... அவங்களை எப்படி சமாளிக்கலாம்னு முதல்லேர்ந்து பார்க்கலாம்.
தமிழ் மொழியில இருக்குற மாதிரியே ஆங்கிலத்திலும் பேச்சு வழக்கில் ஒன்றும், எழுதும்போது ஒன்றுமாக உபயோகிப்பார்கள். பொதுவாக பேசுவதை Informal என்றும், எழுதுவதை Formal என்றும் அழைப்பார்கள். பேச்சிலும் அலுவலக ரீதியாக பேசுவது வேறு (Formal – ஃபார்மல்), நட்புக்களுடன், பொது ஜனத்துடன் பேசுவது வேறு (Informal – இன்ஃபார்மல்). இங்கே இரண்டு சந்தர்ப்பங்களிலும் உங்களைப் பற்றிய அறிமுகத்தை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். Let’s go….

பொதுவாக எல்லாரிடமுமே கீழிருப்பது போல் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
Hi, My name is Anisha
உங்க பேரு ‘மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர்ராஜன்’ஆக இருந்தாலும், முன்னாடி நிக்கிறவர் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கனும்ன்னா
Hi, my name is Sundar
அப்படின்னு சொன்னாலே போதும். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களை / சூழ்நிலைகளை Casual / Informal அப்படின்னு சொல்வோம் ஆங்கிலத்தில். சரியா??
அதுவே ஒரு இண்டர்வியூக்கு போறீங்க... அல்லது பிஸினஸ் விஷயமா ஒரு பெரும்புள்ளியை அலுவலக ரீதியா சந்திக்கிறீங்க.... இந்த மாதிரி சூழ்நிலைகளை Formal அப்படின்னு சொல்வோம். இதுல நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது முழுப்பேரையும் சொன்னால்தான் நலம்.
[‘இராஜாதி ராஜ மார்த்தாண்ட குலோத்துங்க பராக்கிரம சுப்பையன்’ன்னு பேர் இருந்தால் அதை பயோடேட்டாவோட நிறுத்திக்குங்க ப்ளீஸ்....வேணாம்...:(( ]

உதாரணத்துக்கு :
Hi My name is, Omar Abdullah.

(
அல்லது கூப்பிடுவதையும் முழு பேரையும் ஒரே நேரத்தில் சொல்ல ஆசைப்பட்டால் )
Hi, My name is Karthick. Karthick Natarajan.
(இதை இன்னும் சில விதங்களிலும் சொல்லலாம்.... உங்களுக்கு எந்த ஸ்டைல் பிடிச்சிருக்கோ...அந்த ஸ்டைல்ல :))
Hi, I am Bombay Batsha. Call me Rajini.
(smile  கண்டிப்பா உதிர்ந்து விடாமலே வைங்க)

சில சமயம் ஃபோனில் அல்லது ஈ-மெயிலில் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள தேவைப் படும்போது இப்படியும் பேசலாம் / எழுதலாம்:
Hello, This is Ibrahim.
(அல்லது தெரிந்த நபருடன் பேசுகிறோம், அவருக்கு நம்மை அடையாளம் காண இயலவில்லை எனில்)
Hey It's me...Anisha. Remember??
(அல்லது)
Hey It's me...Shruti... I am your …
(team mate / class mate / assistant / manager....இப்படி எந்த உறவுமுறை உங்களுக்குள் இருக்கிறதோ அதை உபயோகியுங்கள்.)

(
அல்லது முதன் முதலில் யாரையேனும் சந்திக்கிறீர்கள். முதல் தடவையாக ஒரு டீமில் இணைகிறீர்கள்..அல்லது ஒரு வகுப்புக்கோ / குழுவிற்கோ சுய அறிமுகம் தர வேண்டி உள்ளது....அல்லது திடீரென ஒரு ஸ்டேஜில் உங்களிடம் மைக் கொடுத்து விடுகிறார்கள்....இந்த மாதிரி சமயங்களில்)
Hi. Let me introduce myself... I am Michael.
(அல்லது)
Hello all. Allow me to introduce myself. I am Amina from Wonderland.
(smile please... :)
(அல்லது)
I just wanted to introduce myself.... I am Jaleela, your new Catering Teacher.

(
அல்லது உங்கள் குழந்தைகளின் நட்புக்களின் பெற்றோரை சந்திக்கும் தருணம்.... இது மாதிரி உதாரண சம்பவங்களில்)
I don't think we have met before.... I am Kannan.And you?
(இது casual நினைவில் வையுங்கள்...)
(அல்லது)
I don't think we've actually met formally yet,... I am Shah. May I know about you??
(தமிழில் சொன்னால்.... இது வரை நாம சந்திச்சதில்லைன்னு நினைக்கிறேன்.... நான் ஷாஹ். உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா??--- இது formal/business சந்தர்ப்பம்.... நினைவில் வைங்க)
இதில் இருப்பது போலவே பேச வேண்டும் என்றில்லை. மெதுவாக், தெளிவாக அதே நேரம் அழுத்தமாக நீங்கள் உங்களின் பெயரை “நான்” / I am என்று உங்களுக்கு தோதான விதத்தில் சொன்னாலே போதுமானது.

★சரி, இந்தப்பாடத்தில் ஒரு சின்ன தேர்வு. முயற்சித்துப் பாருங்கள்★
1.       ஜோசப் ரயில்ல பயணம் செய்யறார். கொஞ்சம் தொலைதூர பயணம் என்பதால் அருகில் இருப்பவரிடம் பேச நினைக்கிறார். அவரை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வார்???
2.       நிஷா வெளிநாட்டுக்கு புதிது. அப்பார்ட்மெண்ட்டுல வசிக்க வர்றாங்க. கணவன் வேலைக்கு போனதும் பக்கத்து அப்பார்ட்மெண்ட்டுல இருக்கும் பெண்ணிடம் நட்பை துவங்கலாம்னு நினைச்சு போறாங்க. கதவை திறக்கும் அந்த பெண்ணிடம் எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வாங்க??
3.       வருண், தன்னுடைய மனைவியோடு அவங்களின் குழந்தை கிஷன் படிக்கும் ஸ்கூலுக்கு போறாங்க. அங்கே தலைமையாசிரியரிடம் எப்படி அவங்களை அறிமுகப்படுத்திக்குவாங்க???

இதற்கான பதில்களோடு அடுத்த திங்கள் இன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால் சந்திக்கலாம். அதுவரை, Have a Happy weekend :))