Thursday, October 18, 2012

தொடர்வினையும், சுவாரசியமான உரையாடலும்


ஹெல்லோ சகோஸ்,
எப்படி இருக்கீங்க…. மன்னிக்கனும்போன பாடத்தில் சில எடிட்டிங் வேலைகள் செய்ய சொல்லி அனைவரும் சொல்லியும்அதைச் செய்ய எனக்கு நேரம் கிட்டவில்லை…. மன்னிச்சுக்குங்கஇனிமே அந்த பிரச்சினைகள் இல்லாம எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ். சரி, இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமான பாடம். என் அருமை அண்ணன் ஹைதர் அலி அண்ணா, விடாமுயற்சியின் இன்னொரு பெயர் எனலாம். J மாஷா அல்லாஹ்…. அவரும் ஒரு காரணம்இந்த தளத்தை ஆரம்பிக்க. அவருடன் நடந்த சுவாரசியமான உரையாடல் இங்கே உங்களுக்கு பதிவாக. இது தொடர்ச்சியாகவும், தொடர்ச்சியாக இல்லாமலும், வாக்கியங்களை எப்படி பேசுவோம் என்பதற்கான பாடம். இதன் முடிவில் சில வாக்கியங்கள் உங்களுக்கான கேள்வி. இன்ஷா அல்லாஹ் தொடர்வோம் வாருங்கள் J

ஹைதர்: கேட்டல், படித்தல், பார்த்தல். அனைத்து வழிகளிலும் ஆங்கிலத்தை உள்ளே திணிக்கிறேன்
ஹா ஹா ஹா

annublogs: சரி நான் உங்களை கேள்வி கேட்கவா?

ஹைதர்:: கேளுங்க

annublogs: ஒகே
நான் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கிறேன்- இதை ஆங்கிலத்தில் எப்படி சொல்வீங்க?

ஹைதர்:: i see one video. do you understand?

annublogs: I very well understand that you have some mistakes :)

ஹைதர்:: spling mistag

annublogs: பார்த்துக்கொண்டிருக்கிறேன்---- இது தொடர்ச்சியான விஷயம்.... see-இந்த வார்த்தை தொடர்ச்சியை குறிக்கவில்லை :) புரியுதா??? எங்கே தப்புன்னு?

ஹைதர்:: yes i do

annublogs: :).... you do??? then give me the right answer :)

ஹைதர்:: no i don t. இன்னும் எனக்கு பயிற்சி வேண்டும்

annublogs: ha ha haa... சரி...கவனிங்க. தொடர்ச்சியா ஒரு விஷயத்தை செய்யறோம்னு சொல்றப்ப அந்த வினையோட '-ing' சேர்த்துக்குவோம். அதாவது இது ஒரு "நிகழ்காலத் தொடர் வினை" (Present Continuous Tense)   

ஹைதர்:: ம்ம்

annublogs: example: reading, playing, seeing, eating.... இது மாதிரி

ஹைதர்:: சகோ நீங்க சொல்லி தாங்கே

annublogs: இன்னொரு விஷயம்.... ஆங்கிலத்தில் see / watch -- (கைல கட்டறது இல்லை....) இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு

ஹைதர்:: ம்ம்

annublogs: see-என்பது வெறுமனே பார்த்தல்.... தை நாம் பார்க்கிறோமோ அதிலிருந்து எதையும் கற்கவேண்டும் / புரிந்து கொள்ள வேண்டும் என்பது தேவையில்லை.... ஆனால் watch -- என்பது, கவனித்தல். நாம் குறிப்பிட்டு, எதையோ கற்க வேண்டி / தெரிந்து கொள்ள வேண்டி .... மகிழ்ச்சிக்காக கூட இருக்கலாம்.... ஒரு பொருளோடு அந்த வேலையை செய்கிறோம் என்று அர்த்தம்.

ஹைதர்:: நான் சொல்லவா?

annublogs: சொல்லுங்க. :))

ஹைதர்:: she might be watching tv.  சரியா? :'(

annublogs: இல்லை... இல்லை...உங்க தரப்பிலிருந்து சொல்லுங்க. முதல்ல உங்களைப் பார்ப்போம்....அப்புறமா அண்ணியப் பத்தி பேசலாம் :)

ஹைதர்:: ஹா ஹா

annublogs: I see a rainbow, I see an egg, I see the cloud.... – இது நாம் ஒரு பொருளைப் பார்க்கையில் சொல்வது. ஆனால், அதுவே ‘கவனிக்கையில்’ ??

ஹைதர்:: i do watching tv. சரியா?? இல்லையா?

annublogs: அண்ணா... 'do' என்பதுதான் வினை(do - செய்தல்) ...அதைத்தான் watchingனு சொல்லியாச்சே... ரெண்டு வினை வருமா??? எனவே I am watching the TV என்பதே சரி

ஹைதர்:: ம்ம்

annublogs: இல்லைன்னா... ஒரு வீடியோவாக இருந்தால் I am watching a video

ஹைதர்:: yes

annublogs: சரி, இதையே நீங்க நேற்று நான் ஒரு வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன்னு சொல்லுங்கநேற்று நான் ஒரு வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஹைதர்:: was i am watching a video

annublogs: Good.... "I was watching a video"...

ஹைதர்:: ஐய். ஜாலி

annublogs: இது குறிப்பா...அந்த நேரத்துல நீங்க என்ன செஞ்சிட்டிருந்தீங்கன்னு கேட்கிறப்ப சொல்வீங்க.... சரியா? :))

ஹைதர்: நான் கற்றுக் கொள்வேன் நம்பிக்கை வந்து விட்டது

annublogs: அல்ஹம்துலில்லாஹ் பாய்.... உண்மையிலேயே நல்ல முன்னேற்றம் :)

ஹைதர்: கேளுங்ககேள்விகளை

annublogs: :)) நேரம் சம்பந்தப்படாம.... வெறுமனே நேத்து அந்த வீடியோவைப் பார்த்தேன்’ -- இதை எப்படி சொல்வீங்க

ஹைதர்: தெரியவில்லை?? எழுத தெரியவில்லை

annublogs: ஆஹா முயற்சி செய்ங்கதிருத்திக்கலாம்

ஹைதர்: yerter tay I watching a video

annublogs: இல்லை... இது மறுபடியும் தொடர்ச்சியா / தொடர்வினையா சொல்றீங்க.... இப்ப நான் ஒரு வாக்கியம் எழுதறேன்... அதைப் பார்த்துட்டு எப்படி எழுதனும்னு யோசிங்க சரியா . Yesterday I saw your Umrah Photo.

ஹைதர்: Yesterday i watching a video.

annublogs: ஓரளவு சரி... :)

ஹைதர்: Yesterday i watch a video

annublogs: good.... masha allaah.... சின்ன பிழை மட்டும்தான். yesterday I watched a video. எப்பொழுதும் past வேலையை குறிக்கும்போது வினையுடன் – verb-உடன், ‘ed’ சேர்த்த வேண்டும் (சில எக்ஸெப்ஷன்ஸ் உண்டு…. உதாரணத்திற்கு see/saw, learn/learnt, dream/dreamt, go/went…. இந்த மாதிரி) ஆனால் பொதுவான விதி, இறந்த காலத்தை குறிக்கும்போது verb-உடன் ‘ed’ சேர்த்த வேண்டும்.

ஹைதர்: thank you sister

annublogs: சரி பாய்.... இன்ஷா அல்லாஹ்
 பார்ப்போம்.... வஸ் ஸலாம் :)

ஹைதர்: வஸ்ஸலாம்.


என்ன சகோஸ், மேலிருக்கும் உரையாடல் பார்த்தீங்களா??? இதில் இன்று நாம் என்ன கற்றுக் கொண்டோம்... ஒரு செயலை தொடர்ச்சியாக செய்யும்போது, குறிப்பிட்ட நேரம் வரை அதை செய்து கொண்டிருப்பின், அதனை தமிழில் நிகழ்காலத் தொடர் வினைஎன்பார்கள். அதுவே ஆங்கிலத்தில் ‘Present Continuous Tense' என்பார்கள். இந்தப் பெயரெல்லாம் மனனம் செய்து வைக்க வேண்டிய அவசியமில்லை. இன்ஷா அல்லாஹ், புரிந்து கொண்டால் போதும். இன்னும் சில உதாரணங்களைக் காணுங்கள்.

நிகழ்காலத்தில்:
·         Baby is crying.
·         Water is boiling.
·         Machine is grinding.
·         She is walking.
·         He is reading.
·         They are playing.
·         Dog is barking.

இதுவே இறந்த காலம் எனும்போது:
·         He was sleeping.
·         I was drinking.
·         She was studying.

எதிர்காலம் கொஞ்சம் சிக்கலானது.... (வாழ்க்கையிலும் அப்படித்தான் என்கிறீர்களா??? :))) எனவே அதை மட்டும் சில நாட்களுக்கு பின்னர் பார்ப்போம். இனி, இந்த வார கேள்விகள்.

கீழிருப்பதையெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படியுங்கள். பேசிப்பாருங்கள். இங்கேயும் எழுதுங்கள். தப்பை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. :))

1. நான் பல் தேய்த்துக் கொண்டிருக்கிறேன்.
2. ரயில் வண்டி வந்து கொண்டிருக்கிறது.
3. அவன் அலைபேசியை தொலாவிக் கொண்டிருக்கிறான்.
4. அவள் தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறாள்.

ஆச்சா??? இனி கீழ் வரும் வாக்கியங்களில் அடைப்புக்குறிக்குள் உள்ள வினையை எப்படி எழுதவேண்டுமோ, அப்படி எழுதுங்கள். :)

example:
Q: I __________________ (TEACH) Science.
A: I am teaching Science.

Questions:
1. I ______________(LEARN) Maths.
2. He ________________(RUB) his eyes.
3. She __________________ (WRITE) her homework yesterday.
4. Gobu _____________(CYCLE) last evening.
5. Minnie ___________________(LEAVE) to India today.
6. Maryam  _______________(BLOG) about Eid.
7. We ________________(SLEEP) on the sofa last night.
8. We _________________(GO) to Masjid now.
9. ______________(PACK) is a big task.
10. ______________(LISTEN) is _______________ (LEARN)

இன்னொரு முக்கியமான விஷயம்…. நான் யதேச்சையாக இந்த தளத்தை (http://aangilam.blogspot.com) இன்றுதான் பார்த்தேன். இந்த தளத்தில் ஏற்கனவே ஒரு சகோதரர் கிட்ட்த்தட்ட எல்லா பாடங்களையும் எழுதியுள்ளார். அதையும் உபயோகித்துக் கொள்ளுங்கள். மிக நன்று சகோ அருண்..!
சரி சகோஸ்.... மீண்டும் சந்திப்போம்.... என்ன கேள்விகள் இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள் :))

25 comments:

 1. அண்ணா இப்பலாம் சாட்ல பாதி இங்க்லீஸ் தான் பேசுறாங்க.. பேஸ்புக் கமென்ட்ஸும், ஜீமெயில் ஸ்டேடஸ்ஸும் இங்க்லீஸ் தான்.. வாழ்த்துகள் அண்ணா.. (நானும் சீக்கிரமா கத்துக்கிட்டு உங்கள முந்துறேன் ஹி..ஹி..ஹி...)

  at the chat conversation between me and br.hyder he was used more english words... i am so proud about his interest and get fear... for this reason, now i am also trying to Overtake him :-)- ஏதோ என்னால முடிஞ்சது.. திருத்தி தாங்க டீச்சரம்மா...

  ReplyDelete
  Replies
  1. ஆமி.... உண்மையிலேயே ஹைதர் அலி பாய், பாஸித், ஃபாயிஜா, குலாம் போன்ற சகோக்களின் முயற்சிகளையும், அவர்களின் மெனக்கெடலும்தான் எனக்கு உத்வேகம் தருவதே... ஊக்கமளிப்பதே :))

   Delete
  2. Engalukagavey neega thodrthu post pannuga.. teacher

   Delete
 2. assalaamu alaikkum sister Annu,
  I strongly agree Amina's comments about Hyder Bhai.
  Hyder bhai u r rocking.
  Thanks for your efforts sister.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸலாம் ஷேக் தாவூத் பாய்,

   அல்ஹம்துலில்லாஹ்..... ஜஸாக்கல்லாஹு க்ஹைர் பாய் உங்க து’ஆக்களுக்கு. :)

   Delete
 3. Sako Annu..

  What a fantastic work!!!!!! really I appreciate. Keep up the good work.

  Haithar Anne....

  Congrats. You rocks. Keep going buddy....

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸலாம் சிராஜ் பாய்,

   அல்ஹம்துலில்லாஹ்..... ஜஸாக்கல்லாஹு க்ஹைர் பாய் உங்க து’ஆக்களுக்கு. :)

   Delete
 4. ஹைதர் அலி அண்ணா வாழ்த்துக்கள் ... இனி உங்களை எல்லாம் ஆங்கில தாவா தலத்தில் தான் பாக்கணும் .. இன்ஷா அல்லாஹ் ...

  அதுக்காக தமிழை மறந்துவிடாதீங்க ... தமிழ் தாவாவும் செய்யணும் ...

  நல்லா வருவீங்க ... இன்ஷா அல்லாஹ் ...

  ReplyDelete
 5. 1.i am brushing my teeth
  2.now the train is coming
  3.hes speak in mobile phone
  4shes drinking tea.

  ReplyDelete
  Replies
  1. He s speaking in mble phone

   Delete
  2. 1. correct. :)
   2. correct.:) (when you write, "now" will come at the end)
   3. wrong.-- He is searching for the mobile phone.-- or -- He is looking for his mobile phone.
   4. correct :))

   Delete
 6. I am learning maths
  He was rubed his eyes
  She has writen her homework yesterday
  Gobu was cycling last week
  Minnie has leaving to india today
  Mariyam is bloging eid
  We are sleap on the sofa laat night
  We are going to masjid now
  My pack is a big task
  Listen learn i cant understand.

  ReplyDelete
  Replies
  1. 1. correct. :)
   2. wrong. :(
   3. இங்கே நாம் பார்ப்பது வெறும் நிகழ்காலத் தொடர்வினை மட்டுமே. எனவே சிம்பிளா She was writing her homework yesterday.
   4. correct. :)
   5. is leaving
   6. correct :)
   7. wrong :(
   We were sleeping on the sofa last night.
   8. correct :)
   9. wrong :( --- Packing is a big task. ---
   10. Listening is learning. :)))

   masha Allah.... great job sis :))

   Delete
  2. Annu 3 days back i send one mail for u? R u see that mail. ? I have some doubts abt in past tense. Some place we used 'ed' same place we useing 'ing'. Enga eppadi use pannanum endru solluga.

   Delete
 7. ஸலாம் சகோதரி அன்னு. மாஷா அல்லாஹ். இது கொஞ்சம் அணைவருக்கும் புறிய கூடிய முறையில் நல்ல எழிய முறையாக இருக்கிறது, இப்படியே பின்பற்றவும் மற்றும் சகோதரி (Active + ing) Tense எந்த எந்த இடத்தில் வருகிறிதோ
  (உ,ம்,)
  முன்பே தொடங்கி இப்போதும் நடந்துக்கொன்டி இருக்கிறது has been (Active + ing)
  பின்பு நடந்துக்கொன்டி இருக்கும் will be, (Active + ing)
  இந்த ing எங்கெல்லாம் வருமோ அந்த டென்ஸ் முடித்து விட்டு மற்ற டென்ஸ்க்கிற்கு போனல் குழப்பம் இல்லம்மல் இருக்கும் என்பது எனது கருத்து.

  கட்டம் கட்டம் வேண்டாம் சகோதரி, பெயர்களை கலரை மாற்றி Bold ஆக போட்டுவிட்டுடால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்,

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸலாம் சகோ நிஜாம்,

   /கட்டம் கட்டம் வேண்டாம் சகோதரி, பெயர்களை கலரை மாற்றி Bold ஆக போட்டுவிட்டுடால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்,//
   இன்ஷா அல்லாஹ் ரீ எடிட் செய்ய இன்னும் கொஞ்சம் டைம் குடுங்க ப்ளீஸ் :))

   Delete
 8. 1, I am brushing teeth
  2, Train is coming
  3, He is searching a Mobile Phone
  4, She is drinking a tea

  1. I learning Maths.
  2. He is Rubbing his eyes
  3. She was writeing her homework yesterday.
  4. Gobu was cycling last evening.
  5. Minnie left to India today.
  6. Maryam is Blogging about Eid.
  7. We slept on the sofa last night.
  8. We are going to Masjid now.
  9. Packing is a big task.
  10. ............ ??? இது எப்படி வரும் என்று தெரியவில்லை சகோ.

  ReplyDelete
  Replies
  1. @இராஜகிரியார், yes. you are right :)

   brother Nizam,
   1. I ***am*** learning maths.
   2. correct.
   3. correct.
   4. v
   5. No... Minnie is leaving to India today. :)
   6. correct.
   7. No.... for this tense, it should be, we were sleeping on the sofa last night. :)
   8. correct.
   9. correct.
   10. rajagiriyar is right :))

   Delete
 9. சலாம் சகோ.

  நான் உங்கள் தளத்தில் ஃபாலோயர் ஆகிவிட்டேன். ஆனால் அப்டேட் ஒன்றும் கிடைப்பதில்லையே ஏன்?

  Please teach me to tell the above sentense in English.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸலாம் சகோ....

   ஏன் என்று தெரியவில்லை..... சகோ.பாஸித்திடம் கேட்டுப்பாருங்களேன்.... பதில்களை மேலே செக் செய்து கொள்ளுங்கள் சகோ.

   Delete
  2. சலாம் சகோ.

   //நான் உங்கள் தளத்தில் ஃபாலோயர் ஆகிவிட்டேன். ஆனால் அப்டேட் ஒன்றும் கிடைப்பதில்லையே ஏன்?//

   Actually I want to tell this sentense (my comment) in English. Could you please help me?

   Delete
  3. oops....
   wa alaikkum as salam.... sorry brother. My bad.

   the answer would be, "I became a follower in your site. Yet I dont see any updates. Why?"

   Delete

Please leave a decent / encouraging / criticizing word.... not discouraging / offensive or of illicit nature. Thanks !